இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தங்களுடைய தொடக்க ஆட்டத்தை நல்லபடியாக துவங்கியிருந்தாலும் தொடர்ந்து 5 முறை தோல்வியை சந்தித்த ரசிகர்களிடையே மிகப் பெரிய வருத்தத்தை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன்பின், LSG அணியுடன் ஆன போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நிலையில், அதற்கு அடுத்ததாக விளையாடிய MI அணியுடன் மீண்டும் CSK அணி தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று SRH உடன் நடைபெற இருக்கக்கூடிய ஆட்டத்தில் புதியதாக ஒரு இளம் வீரரை களம் இறக்க CSK அணி முடிவு செய்து இருக்கிறது.
21 வயது நிறைவடைந்த தென்னாப்பிரிக்கா இளம் கிரிக்கெட் வீரரான டிவால்ட் பிரெவிஸ் என்பவரை இன்றைய ஆட்டத்தில் களமிறக்க சென்னை அணி முடிவு செய்திருக்கிறது. இவர் பிரபல தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியம்ஸ் போன்று பேட்டிங் செய்வதால் இவரை பேபி ஏபி என அனைவரும் அழைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது குறைந்த ஸ்ட்ரைக் ரைட்டில் 81 டி20 மேட்ச் களில் இதுவரை 1700 க்கும் மேற்பட்ட ரன்களை குறித்து சாதனை படைத்திருக்கிறார். இந்த காரணங்களுக்காக மட்டும் சென்னை அணி இவரை விளையாட அனுமதிக்க வில்லையாம்.
நேற்று சென்னை அணி ப்ராக்டிஸ் மேட்ச் விளையாடிக் கொண்டிருந்த பொழுது டிவால்ட் பிரெவிஸ் பேட்டிங் பிடித்திருக்கிறார். அப்பொழுது இவருடைய ஆட்டத்தை சென்னை அணியின் தலைமை பொறுப்பாளர்கள் மட்டுமல்லாது கேப்டன் தோனி அவர்களும் உற்று நோக்கியதாகவும் ஒத்திகை ஆட்டத்தில் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை இளம் வீரர் வெளி காட்டியதால் இந்த முடிவை தோனி அவர்கள் எடுத்திருப்பதாகவும் இன்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த இளம் வீரரை களம் இறக்குவது மூலம் சென்னை அணி வெற்றி அடையும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.