மார்ச் 22 ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய இந்தியன் பிரீமியர் லீக் மேட்ச் ஆனது ரசிகர்களை அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. காரணம் இந்த முறை ஐபிஎல்லில் இடம் பெற்று இருக்க கூடிய 10 அணிகளுக்கும் பல்வேறு வீரர்கள் மற்றும் கேப்டன்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அணிகளில் மிகவும் மோசமான அணியாக எந்த அணி உள்ளது என்பது குறித்தும் அந்த அணியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்தும் தொகுப்பாளர் முத்து அவர்கள் விவரித்து இருக்கிறார்.
தொகுப்பாளர் முத்து அதிக ஓட்டை இருப்பதாக தெரிவித்த அணி மற்றும் அதற்கான விவரங்கள் பின் வருமாறு :-
லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியில் தான் அதிக அளவு ஓட்டை இருப்பதாகவும் காரணம் கடந்த ஆண்டு அதாவது IPL 2024 ஆம் ஆண்டு கே எல் ராகுல் கேப்டனாக இருந்த பொழுது அவருடைய கேப்டன்ஷியில் குறுக்கீடுகள் நடந்ததாகவும் இது போன்ற குறுக்கீடுகள் நடைபெறுவதால் அந்த அணியால் சரியாக பர்ஃபார்மன்ஸ் செய்ய முடியவில்லை என்றும் அதேபோன்றுதான் இப்பொழுது ரிஷப் பண்ட் அவர்கள் அணியின் தலைவராக இருக்கக்கூடிய தருணத்திலும் நிகழ்கிறது என தெரிவித்திருக்கிறார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியில் மிச்சல் மார்ஸ், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டவர்கள் சிறந்த ஆட்ட வீரர்களாக இருக்கக்கூடிய நிலையில் அவர்களுடைய ஆட்டத்தை முடிவு செய்ய அந்த அணியின் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த அணியில் அது போன்று நிகழ்வுகள் இல்லாத காரணத்தால் பல குழப்பங்கள் ஏற்படுவதாகவும் முத்து தெரிவித்திருக்கிறார்.
அவர் தெரிவித்தது போலவே நேற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு எதிரான ஆட்டத்தின் பொழுது நிக்கோலஸ் பூரன் தன்னுடைய சிறந்த ஆட்டத்தால் 35 பந்துகளுக்கு 70 ரன்கள் அடித்த தன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரைத்தொடர்ந்த மிச்சல் மார்ஸ் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஸ்கோர்களை குவித்த பொழுதும் நல்ல பந்துவீச்சாளர்கள் இல்லாத காரணத்தாலும் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியானது தோல்வியை சந்தித்திருக்கிறது.