திட்டமிட்டபடி IPL ஏலம் நடைபெறுமா?

0
112

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மற்றும் டெல்லி போன்ற இடங்களில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது இதனால் IPL ஏலம் திட்டமிட்டபடி கொல்கத்தாவில் நடைபெறுமா என்ற தகவல் கசிந்தது.

இதனிடையே திட்டமிட்டபடி IPL ஏலம் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.IPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் ஏலப்பட்டியலில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 332 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் இருந்து 73 வீரர்கள் ஏலம் மூலம் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.85 கோடிவரை ஏலத்தில் செலவிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. இதில் ஏற்கனவே தக்க வைத்துள்ள வீரர்களுக்கான ஊதியத்தை கழித்து மீதமுள்ள தொகையைத் தான் ஏலத்தில் பயன்படுத்த முடியும். உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 20 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான ஒட்டுமொத்த சம்பளத் தொகை ரூ.70 கோடி போக மீதமுள்ள ரூ.15 வரை கோடியை கொண்டு தங்களது அணிக்கு தேவையாக உள்ள எஞ்சிய 5 வீரர்களை எடுக்க முடியும்.இது மற்ற அணிகளுக்கும் பொருந்தும். இந்த ஏலத்தில் எந்த எந்த வீரர்கள் தக்க வைக்க படுகின்றனர் எந்த வீரர்கள் மாற்ற படுகின்றனர் என நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Previous articleஉச்ச கட்டத்தை அடையும் குடியுரிமை சட்டம் !!! எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால் ??? மோடிக்கு எதிராக குடியரசு தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை !!!
Next articleஇன்று முதல் வலிமை, தலைவர் 168 படப்பிடிப்புகள் தொடக்கம்: ரஜினி அஜீத் சந்திப்பா?