உச்ச கட்டத்தை அடையும் குடியுரிமை சட்டம் !!! எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால் ??? மோடிக்கு எதிராக குடியரசு தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை !!!

0
63

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், முஸ்லிம்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜார்கண்டின் பர்ஹாயத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ காங்கிரஸ் கட்சி பொய்களைப் பரப்பி வருகிறது. இந்தப் புதிய சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய குடிமகன்களின் உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்காது, காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஒரு சவாலை விடுக்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால், ஒவ்வொரு பாகிஸ்தானியருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவிக்கத் தயாரா? அப்படி அறிவித்தால் அதற்கான பிரதிபலனை நாட்டு மக்கள் அவர்களுக்கு அளிப்பார்கள். குடியுரிமை சட்டம் இந்திய குடிமகனுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்றும் பிரதமர்  மோடி தெரிவித்தார்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு மோடி அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு கோரிக்கை வைத்துள்ளது.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான 12 கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் குழு குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் இந்தச் சட்டத்துக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்தனர்.

அவர்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விஷயங்களில் தலையிடுமாறு குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான மற்றும் மக்களைப் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற மோடி அரசுக்கு அறிவுரை வழங்குமாறும் கோரிக்கை வைத்தனர்.

author avatar
Parthipan K