ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி முகாம்!! சென்னைக்கு என்ட்ரி கொடுத்த எம் எஸ் தோனி!!

Photo of author

By Parthipan K

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி முகாம்!! சென்னைக்கு என்ட்ரி கொடுத்த எம் எஸ் தோனி!!

Parthipan K

IPL Cricket Training Camp!! MS Dhoni gave entry to Chennai!!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி முகாம்!! சென்னைக்கு என்ட்ரி கொடுத்த எம் எஸ் தோனி!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் நேற்று தொடக்கம்.
உலக அளவில் அனைத்து மக்களுக்கும் பிடித்த கிரிக்கெட் போட்டி (IPL) .
16ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வருகிற 31ஆம் தேதி முதல் மே 28 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
இந்தப் போட்டியில் சென்னை, மும்பை ,பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற உள்ளது.
உலகிலே பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் அரங்கேற்றம் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன்ஸ் (GT)குஜராத் டைட்டன்ஸ் , நாலு முறை சாம்பியன்ஸ் (CSK) சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள்  மோதுகின்றன.
இந்தப் போட்டிக்காக தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
முகாமில் பங்கேற்க நேற்று இரவு சென்னை வந்தார் கேப்டன் தோனி.
சென்னை வந்த தோனிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
டோனி உடன் ரகானே ,சிவம் துபே , சேனாபதி உள்ளிட்ட வீரர்கள் சென்னை வந்தனர்.
பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் மட்டும் கலந்து கொள்ள இருப்பதாகவும் , முகாம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது முடிவு செய்யவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் தெரிவித்தார்.