ஈரான் அதிபருக்கு என்ன ஆனது! நடுவானில் அலறல்… ஹெலிகாப்டர் விபத்து! தவிக்கும் மீட்புப்படை!

0
996
ஈரான் அதிபருக்கு என்ன ஆனது! நடுவானில் அலறல்... ஹெலிகாப்டர் விபத்து! தவிக்கும் மீட்புப்படை!
IRAN HELI

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் ஜோல்பா என்ற இடத்தில் விபத்துக்குள்ளான உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதிபரின் கான்வாயில் சென்ற 2 ஹெலிகாப்டர்களில் பயணித்த 2 அமைச்சர்கள், அதிகாரிகள் பத்திரமாக உள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அதிபருக்கு என்ன ஆனது! நடுவானில் அலறல்... ஹெலிகாப்டர் விபத்து! தவிக்கும் மீட்புப்படை!
IRAN

மோசமான வானிலையால், விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப்படையினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும், டிரோன்கள் மூலம் மீட்புப் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளதாகம் அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அந்நாட்டுக்கு செய்தி ஊடகம் விடுத்துள்ள செய்தியில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் , கிழக்கு அஜர்பைஜான் கவர்னர் மாலிக் ரஹ்மதி மற்றும் தப்ரிஸின் இமாம் முகமது அலி அலே-ஹஷேம் ஆகியோர் ஹெலிகாப்டரில் இருந்துள்ளனர்.

“இது ஒரு சிக்கலான பகுதி, மேலும் தொடர்பு கொள்வது கடினம். மேலும் தகவலுக்கு குழுக்கள் அந்த பகுதியை அடைய நாங்கள் காத்திருக்கிறோம். கடுமையான மூடுபனி மற்றும் கடினமான வானிலை அப்பகுதியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளது, இது சிறிது நேரம்” எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் அலி வஹேதி கூறியுள்ளார்.