IRCTC: குரல் பதிவு மூலம் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் – இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!
இந்தியாவில் பெரும்பாலானோர் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் போக்குவரத்தை தேர்வு செய்கின்றனர்.மற்ற போக்குவரத்தை ஒப்பிடுகையில் ரயில் பயண கட்டணம் மிகவும் குறைவு என்ற காரணத்தினால் பலர் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.
கடந்த காலங்களில் ரயில் நிலையத்திற்கு சென்று டிக்கெட் எடுக்கும் நிலை இருந்தது.இதனால் வெகுதூர பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.ஆனால் தற்பொழுது ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC மற்றும் பல ஆன்லைன் செயலிகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.
இந்நிலையில் IRCTC மூலம் ஆன்லைனில் டிக்கெட் பெறுபவர்களுக்கு இந்திய ரயில்வே தற்பொழுது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது IRCTC ஆனது AI chatbot உதவியுடன் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையை எளிமையாக்கி உள்ளது.
முன்னர் டிக்கெட் முன்பதிவு செய்ய டைப் செய்ய வேண்டியிருக்கும்.இந்த நடைமுறை டைப் செய்ய தெரியாதவர்களுக்கு சவாலாக இருந்து வந்தது.இந்நிலையில் தற்பொழுது அறிமுகப்படுத்தபட்டுள்ள IRCTC AskDisha 2.0 AI மூலம் அனைவருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்வது எளிமையாகி விடும்.
IRCTC AskDisha 2.0 AI
இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம் மூலம் IRCTC செயலியில் டைப் செய்யாமல் வாய்ஸ் மூலம் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.அது மட்டுமின்றி டிக்கெட் ரத்து செய்வது,PNR சரிபார்ப்பது,பணத்தை திரும்ப பெறுவது,போரிடிங் நிலையத்தை மாற்றுவது போன்றவற்றை செய்யலாம்.