நமது உடலில் இருக்க வேண்டிய முக்கிய ஊட்டச்சத்து இரும்பு.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும்.நம் இந்தியாவில் இரும்புச்சத்து குறைபாட்டால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் பெரும்பாலான பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை பிரச்சனையை அனுப்பிவித்து வருகின்றனர்.உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது உடல் சோர்வு,உடல் பலவீனம் போன்ற பாதிப்புகளை அனுபவிக்க கூடும்.
உடலில் இரும்புச்சத்து குறைந்தால் தோல் நிறம் வெளுக்கத் தொடங்கிவிடும்.அதாவது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் இரும்புச்சத்து தான்.அப்படி இருக்கையில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும்.இதனால் தோலின் மேற்பரப்பு நிறம் வெளிர் மஞ்சளாக மாறிவிடும்.எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை நாம் அவசியம் தினசரி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்:
1)உடல் சோர்வு
2)நகங்கள் வளைதல்
3)முடி உதிர்வு
4)மயக்க உணர்வு
5)நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல்
6)சரும நிறம் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறுதல்
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்:
1)பேரிச்சம் பழம்,பீட்ரூட்,மாதுளை போன்ற போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஐந்து பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து அதிகரிக்கும்.
2)மாதுளை,பீட்ரூட் போன்றவற்றை அரைத்து ஜூஸாக பருகினால் இரும்புச்சத்து அதிகரிக்கும்.பச்சை பயறு,பச்சை கீரைகீரைகளில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது.
3)முருங்கை கீரை மற்றும் முருங்கை காயில் இரும்புச்சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.
5)பூசணி விதை,பீன்ஸ்,பட்டாணி,சுண்டல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது.வால்நட்ஸ்,பிஸ்தா,முந்திரி போன்ற விதைகளை சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து அதிகரிக்கும்.
6)திராட்சை,ஆப்ரிகாட் பழஙகளின் மூலம் தேவையான இரும்புச்சத்து பெறலாம்.உலர் திராட்சை,உலர் அத்தி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.