உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை – மிகவும் ருசியாக செய்வது எப்படி?

0
65
#image_title

உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை – மிகவும் ருசியாக செய்வது எப்படி?

நவீன கால வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.இன்றைய சூழலில் சத்தான உணவுகளை எடுத்து வந்தால் தான் உடலை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது.தானிய வகையைச் சேர்ந்த இந்த கருப்பு உளுந்து அதிகளவு ஊட்டச்சத்துக்களையும்,நார்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

இவை செரிமான பாதிப்பு,நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் தன்மைகொண்டது.மலசிக்கல் பாதிப்பை நீக்குவதோடு குடலின் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*இட்லி அரிசி – 1 கப்

*உடைத்த கருப்பு உளுந்து – 1/4 கப்

*வெந்தயம் -1/4 தேக்கரண்டி

*துவரம் பருப்பு – 1/2 கப்

*கடலைப் பருப்பு – 2 தேக்கரண்டி

*தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 1 தேக்கரண்டி

*சீரகம்- 1 தேக்கரண்டி

*பெருங்காயத்துள் -1/4 தேக்கரண்டி

*வர மிளகாய் – 6

*எண்ணெய் – தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி 1 கப்,துவரம் பருப்பு 1/2 கப், கடலைப் பருப்பு 2 தேக்கரண்டி மற்றும் வெந்தயம் 1/4 தேக்கரண்டி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் 3 முதல் 4 முறை அலசி கொள்ளவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

பின்னர் உடைத்து வைத்துள்ள கருப்பு உளுந்து பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 அல்லது 3 முறை தண்ணீர் ஊற்றி அலசி கொள்ளவும்.பின்னர் ஒரு ஜல்லடையில் போட்டு தண்ணீர் வடியும் வரை விடவும்.

ஒரு மிக்ஸி ஜாரில் வர மிளகாய் 6 மற்றும் கருப்பு உளுந்து சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.பின்னர் அதில் ஊறவைத்துள்ள அரிசி கலவையை சேர்த்து 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.

பின்னர் மிளகு 1 தேக்கரண்டி மற்றும் சீரகம் 1 தேக்கரண்டி மற்றும் பெருங்காயத்தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல் அவை சூடேறியதும் அரைத்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி அளவு எடுத்து தோசை வார்த்து கொள்ளவும்.பின்னர் அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி இரு புறமும் சிவக்க விடவும்.பின்னர் இதை தட்டிற்கு மாற்றி கொள்ளவும்.