இர்ரெகுலர் மாதவிடாய்? இந்த ஒரு காயை காயவைத்து சாப்பிடுங்க.. ஒரு மணி நேரத்தில் பீரியட்ஸ் எட்டி பார்க்கும்!!

Photo of author

By Divya

பெண்களே நீங்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையை சந்தித்து வருகிறீர்கள் என்றால் கீழ்கண்ட இயற்கை வைத்தியத்தை கொண்டு உடனடி தீர்வு காணலாம்.

ஒழுக்கற்ற மாதவிடாய்க்கான காரணங்கள்:

*தைராய்டு
*திடீர் உடல் எடை அதிகரிப்பு
*ஊட்டச்சத்து குறைபாடு
*ஹார்மோன் பிரச்சனை
*கருப்பை நீர்க்கட்டி
*கருப்பை பிரச்சனை
*ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கம்

தேவையான பொருட்கள்:-

1)சுண்டைக்காய் – கால் கப்
2)பசு மோர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கால் கப் அளவிற்கு பச்சை சுண்டைக்கையை பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தண்ணீரில் போட்டு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு சுண்டைக்காயை உரலில் போட்டு ஒருமுறை இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்திற்கு இந்த சுண்டைக்காயை கொட்டிவிட வேண்டும்.

3.பிறகு அதில் ஒரு கப் பசு மோர் ஊற்றி ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.சுண்டைக்காய் பசு மோரில் நன்றாக ஊறிவந்ததும் ஒரு தட்டில் பரப்பி வெயிலில் ஒரு வாரம் வரை காய வைக்க வேண்டும்.

4.சுண்டைக்காய் வற்றல் பதத்திற்கு வரும் வரை காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு கண்டைனரில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5.இந்த சுண்டைக்காய் வற்றலை பொடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் சீரற்ற மாதவிடாய் பிரச்சனை சீராகும்.மாதவிடாய் காலத்தில் வயிறு வலி,அதிக உதிரப்போக்கு சந்திக்கும் பெண்கள் சுண்டைக்காயை இப்படி சாப்பிட்டு வந்தால் பிரச்சனை சரியாகும்.

6.மாதவிடாய் நாட்களுக்கு முன்னர் பச்சை சுண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் உரிய நேரத்தில் மாதவிடாய் வந்துவிடும்.

7.சுண்டைக்காய் வற்றல்,கருஞ்சீரகம் மற்றும் வெல்லத்தை பொடித்து நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் மாதவிடாய் சார்ந்த பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு எள் – ஒரு தேக்கரண்டி
2)வெல்லம் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.கருப்பு எள்ளை வாணலியில் போட்டு வாசம் வரும் வரை வறுத்து ஒரு உரலில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

2.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடானதும் இடித்து வைத்துள்ள கருப்பு எள் பொடியை அதில் கொட்டி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

3.பிறகு இரண்டு தேக்கரண்டி வெல்லத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி பருகினால் சில மணி நேரத்தில் பீரியட்ஸ் வந்துவிடும்.