மத்திய அரசு தரப்பில் வழங்கப்பட்டு வரக்கூடிய பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் முறைகேடு புகார்கள் மற்றும் குற்றங்கள் வரும் பட்சத்தில் ஊழல் தடுப்பு பிரிவின்கேள் வழக்கு தொடர ஒப்புதல் அளிக்கக்கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மத்திய அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஏதேனும் முறைகேடுகளோ அல்லது தவறுகளோ புகார்களாக பதிவு செய்யப்படும் பட்சத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் மூலம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொடர்புடைய ஊழியர்கள் மீது துறைவாரியாக ஒழுங்குமுறை நடவடிக்கை நடக்கவும் அல்லது நிர்வாக தீர்ப்பாயம் மூலம் விசாரணை நடக்கவும், குற்றவியல் வழக்கு மற்றும் அதே குற்றச்சாட்டுகளுக்கான இணையான துறை வழி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசால் வழங்கப்பட்டு வரக்கூடிய பிரதமரின் ஊரக வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் விதிமுறைகளுக்கு தணிக்கை செயல்முறையானது மேற்கொள்ளப்படும் என்றும் அந்த தணிக்கையின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ அல்லது குற்றங்கள் கண்டறியப்பட்டாலோ அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்நிலைக் குழுவுக்கு உரிய அதிகாரத்தை வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.