நடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?

0
285
#image_title

நடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?

நடிகர் அருண் பாண்டியன் அவர்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் தன் மகளின் கல்யாணத்தை மிகவும் எளிமையாக நடத்தியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது.

நடிகர் அருண் பாண்டியன் அவர்களுக்கு 120 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முழுநேர விவசாயி ஆக மாறியுள்ள நடிகர் அருண் பாண்டியன் தனக்கு சொந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார்.  இருப்பினும் தன் மகள் கீர்த்தி பாண்டியன் அவர்களின திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் திருநெல்வேலி மாவட்டம் சேதுராமன் பண்ணையில் மிக எளிமையான முறையில் நடத்தியுள்ளார். நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும் திருமண விழாவிற்கு அழைக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றுள்ளது.

80, 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அருண் பாண்டியன் அவர்கள், 2011ல்  சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க கட்சி வேட்பாளராக பேராவூரணி தொகுதியில் போட்டியிட்டபின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நடிகர் விஜயகாந்த் அவர்கள் உடனான கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி 2016ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் அஇஅதிமுக-வில் இணைந்தார்.

இவருக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் என்ற மூன்று மகள்கள் உள்ளனர். நடிகை ரம்யா பாண்டியன் இவரின் அண்ணன் மகளாவார்.

இவரது மகளான கீர்த்தி பாண்டியன் அவர்கள் நடிகர் அசோக் செல்வன் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் அருண்பாண்டியன் அவர்களுக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் நடைபெற்றது பலரின் பாராட்டை பெற்றது.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளில் செயல்பட்ட அருண்பாண்டியன் அவர்கள் தற்போது அரசியலில் இருந்தும், சினிமாவில் இருந்து சற்று விலகி உள்ளார்.

Previous articleUIIC நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? மாதம் ரூ.88,000/- ஊதியம் கிடைக்கும்! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்.. Don’t miss it!!
Next articleIIITDM Kancheepuram நிறுவனத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.25000/- ஊதியம் வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!