நடிகர் பிரசாந்த் அவர்களின் முதல் படமே இவ்வளவு சிறப்பா?
வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் நவம்பர் 16 1990ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை ராதா பாரதி இயக்கினார்.
நடிகர் பிரசாந்த், காவேரி கே.ஆர் விஜயா ஜனகராஜ் மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா அவர்கள் இசை அமைத்தார்.
பெரிய வெற்றி பெற்ற மற்றொரு விடலை காதல் படம். கிட்டத்தட்ட அலைகள் ஓய்வதில்லை மாதிரியே இருக்கும், அந்த படத்தில் பெரிதும் ரசிக்கப்பட்ட “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” மாதிரி இந்த படத்திலும் “சின்ன பொண்ணு தான் வெக்கப்படுது” பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றது.
அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும் – வைகாசி பொறந்தாச்சு படத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை பார்க்கலாம்.
அந்த படத்தில் வாரிசு நடிகர் அறிமுகம் – இந்த படத்திலும் வாரிசு நடிகர் அறிமுகம்.
வழக்கமாக ஹீரோக்கள் அறிமுகம் காதல் கதைகளிலே தான் இருக்கும். இவர்கள் இருவருக்கும் மட்டும் விடலை காதல். அதாவது பள்ளிப் பருவக் காதல். காதல் எல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது என நினைக்கும் சமுதாயம் நம்முடையது. கல்லூரி காதலுக்கு ரசிகர்கள் சினிமாவுக்கு மட்டும் அனுமதி கொடுத்து இருந்தனர். அத்திபூத்தால் போல வரும் இதுபோன்ற விடலை காதல் படங்களுக்கு மக்கள் பேராதரவு அளித்தனர். இது வழக்கமாக எல்லா காதல் படங்களிலும் வரும் கதையாகும், இந்த படத்திலும் ஏறக்குறைய அதே கதைதான் அபூர்வமாக சில படங்களில் காதல் நிறைவேறாமல் போவது உண்டு.
ஹீரோவாக நடிப்பதற்கு ஆள் பஞ்சம் நிலவிய காலத்தில் அவசர அவசரமாக, அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகர் கார்த்திக் அவர்களும், வைகாசி பொறந்தாச்சு படத்தில் நடிகர் பிரசாந்த் அவர்களும், அறிமுகப்படுத்தபட்டனர். அவர்களின் வயதுக்கு விடலை
காதல் கதைகளில் தான் நடிக்க முடியும் என்பதற்காகவோ படம் மிகபெரிய அளவில் பிரமாண்ட வெற்றியை பெற்று தந்தது.
அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு இசையமைத்தது இளையராஜா அவர்கள் தான். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் போய் சேர்ந்தது. வைகாசி பொறந்தாச்சு படத்திற்கு, தேவாவின் இசையில் பாடல்கள் ஜனரஞ்சகம், ஆடியோ கேசட் விற்பனை அமோகமாக நடந்தது. தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது இந்த படத்திற்கு தேவா அவர்களுக்கு கிடைத்தது.
அறிமுக நாயகன் பிரசாந்த் முதல் படம் என்றாலும் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது.
படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு வேண்டிய பல பயிற்சிகளை ஏற்கனவே, அவர் எடுத்திருந்தார். நடிகர் பிரசாந்த் அவர்கள் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே, அவர் கராத்தேவில் அவர் பிளாக் பெல்ட் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.