நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம்

0
199

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம்

நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல் நலக்குறைவால் காலமானார்.

90 களில் தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயகிகளாக  இருந்தவர்களில் நடிகை மீனாவும் குறிப்பிடத்தக்கவர். தமிழில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்து வெற்றி விழா கண்ட படங்களில் நடித்து கொடி கட்டி பறந்த மீனா தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரான வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது. அவர்களது குழந்தை நைனிகா விஜய்யின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் மரணம் அடைந்தார்.அந்த வேதனையில் இருந்து படிப்படியாக மீண்ட மீனா, தற்போது படப்பிடிப்புகளிலும் விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.

இதையடுத்து அவரை இரண்டாவது திருமணத்திற்கு குடும்பத்தினர் அழுத்தம் கொடுப்பதாகவும், மீனாவின் மகள் நைனிகாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நெருங்கிய உறவினரைத் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு மீனா சம்மதித்துள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் இது குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் பல்வேறு இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் இதுகுறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டதற்கு அதை அவர்கள் உறுதி செய்யவில்லை. மேலும் மீனாவுக்கு 2-வது திருமணம் செய்து கொள்ளும் எந்த திட்டமும் தற்போது இல்லை என்றும் அவர்கள்மறுத்துள்ளனர்.

author avatar
Parthipan K