கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன் அதிமுக அதிமுக பாஜக கூட்டணி இருந்தது ஆனால் இந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி விலகியது. அதன் பின் இனி எப்போதும் பாஜக கூட்டணி கிடையாது. என்று கூறி வந்தனர். இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.
இதனை தொடர்ந்து நேற்று திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி, கூட்டணி என்ற கதவை திறப்பது மூடுவது எல்லாம் கிடையாது. அதிமுகவை பொறுத்தவரை ஒத்த கருத்துக்கள் கொண்ட இணைந்து லஞ்ச லாவண்யம் கொண்ட ஆட்சியை வீழ்த்துவதுதான்.
என்று கூறிய நிலையில், அரசியல் வட்டாரங்கள் அதிமுக மீண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்கப் போகிறது என பேசப்பட்டு வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பதிலளித்துள்ளார், அவர் கூறுகையில் பாஜக உடன் கூட்டணி இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை, இன்றும் இல்லை, நாளையும் இல்லை, இல்லவே இல்லை இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் திமுக தான் மறைமுகமாக கூட்டணியில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.