அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி!

0
198
#image_title

அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இவ்வளவு திறமையானவரா? கோவையில் அண்ணாமலைக்கு சரியான போட்டி!

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், கோவை தொகுதி சற்று பரபரப்பு நிறைந்த தொகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருங்கியவருமான சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் இந்த தொகுதியில் மும்முனை போட்டி சூடுபிடித்துள்ளது.

அதேபோல கோவை தொகுதியில் திமுகவை தாண்டி அதிமுக-பாஜக ஆகிய இரு கட்சிகளும் மாறிமாறி விமர்சித்து வருகின்றன. ஏனென்றால் அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரனும், பாஜகவின் அண்ணாமலையும் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர்‌.

அதிமுக சில தொகுதிகளில் பெரிய அளவுக்கு போட்டியிடாத வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளதாகவும், இது பாஜகவுக்கு சாதகமாக அதிமுக செய்யும் வேலை எனவும் திமுக விமர்சித்து வந்தது. ஆனால் கோவை தொகுதியில் பார்க்கையில் அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் அண்ணாமலைக்கு டஃப் கொடுக்கும் வேட்பாளராக உள்ளார்.

இதனால்தான் மற்ற அதிமுக வேட்பாளர்கள் போல் இல்லாமல், அண்ணாமலையும் சிங்கை ராமச்சந்திரனை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சிங்கை ராமச்சந்திரன் அவரது தந்தையின் எம்எல்ஏ கோட்டாவில் கல்லூரியில் படித்ததாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுத்த சிங்கை ராமச்சந்திரன், “அண்ணாமலை கல்லூரி படித்தபோது தகரடப்பா தூக்க அப்பா இருந்தார். ஆனால் எனக்கு அப்பா இல்லை. தவறான கருத்து கூறிய அண்ணாமலை மன்னிப்பு கூறவேண்டும்” என கூறியிருந்தார்.

இப்படி அண்ணாமலைக்கு டஃப் கொடுக்கும் சிங்கை ராமச்சந்திரன், தனது படிப்பு பற்றியும், தான் பணியாற்றிய பதவிகள் பற்றியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது அண்ணாமலை விமர்சனத்திற்கு அளித்த பதிலடி என்று கூறப்படுகிறது.

அவர் வெளியிட்டுள்ள தகவலில் அப்துல் கலாம் அவர்களால் பாராட்டுப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில் மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் செய்த கட்டணமில்லா மக்கள் பயன்பாட்டு மையம் மூலம் 25000 பயனாளிகளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சேவைகளும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது‌.