இதற்கெல்லாம் தற்கொலையா? மருத்துவமாணவி செய்த விபரீதம்!
சென்னையில் அம்பத்தூர் ஒரகடம் பகுதியை சேர்ந்த, புதூர் சிவசண்முகம் சாலையை சேர்ந்தவர் ராஜ். இவரது மகள் சோனாலி. 20 வயதான இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில், உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியில் சுகாதார அறிவியல் தொடர்புடைய மருத்துவ படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அப்போது மாணவி காப்பி அடித்ததாக, ஆசிரியர் கையும் களவுமாக பிடித்துள்ளார். மாணவியின் தந்தையை வரவழைத்து கண்டிக்கவும் செய்துள்ளார். மேலும் இனிமேல் இதுபோல் நடக்காது என்று மாணவி கடிதமும் எழுதிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று கல்லூரியில் வழக்கம் போல மீண்டும் ஒரு தேர்வு நடந்துள்ளது.
இதில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்த சமயத்தில், சோனாலி மீண்டும் ஆசிரியைக்கு தெரியாமல் தனது செல்போனை வைத்து காப்பி அடித்து உள்ளார். இதையும் அந்த ஆசிரியை பார்த்து சோனாலியை கையும் களவுமாக பிடித்ததோடு, செல்போனையும் வாங்கி வைத்து விட்டார். மேலும் சோனாலியை தேர்வு எழுதாமல் தனியே உட்கார செய்துள்ளார்.
அதன் பிறகு அந்த மாணவி கீழே செல்வதாக கூறிவிட்டு, ஏழாவது மாடியில் இருந்து மூன்றாவது மாடிக்கு இறங்கி வந்து, அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் சோனாலி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்தும் வருகின்றனர்.