பால் பொருட்களில் ஒன்றான வெண்ணெய் அதிக சத்துக்கள் நிறைந்த பொருளாகும்.மோரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இந்த வெண்ணெய் சைவம் மற்றும் அசைவ உணவுகளின் ருசியை கூட்டுகிறது.
எண்ணெய் போன்றே வெண்ணையும் உணவு சமைக்க பயன்படுத்தப்படுகிறது.தயிர் இருந்து மோர் எடுத்து அதில் இருந்து இயற்கையான முறையில் வெண்ணெய் தயாரித்து நம் தாத்தா பாட்டி காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் தற்பொழுது கடைகளில் கிடைக்கும் வெண்ணெயின் தரம் மோசமாக இருக்கிறது.வெண்ணெய் என்ற பெயரில் விலங்கு கொழுப்பு,சல்பர்,மாக்ரைன் போன்றவை கொண்டு செயற்கை வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
இப்படி தரமற்ற வெண்ணையை நாம் பயன்படுத்துவது நமது உடல் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாக மாறிவிடும்.தரமற்ற வெண்ணெய் இயற்கை வெண்ணையை விட சுவையாக இருப்பதால் தான் இதனை பலரும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இந்த கலப்பட வெண்ணையை பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
வெண்ணெயில் அதிக கொழுப்புச்சத்து நிறைந்திருப்பதால் அதை பயன்படுத்தினால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும்.அதிக வெண்ணெய் உணவுகளை உட்கொண்டால் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் கொழுப்பு உருவாகி மாரடைப்பை ஏற்படுத்தும்.
கலப்பட வெண்ணையை அதிகமாக பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.வெண்ணெய் சேர்த்துக் கொள்வதை நாம் தவிர்த்தாலும் நாம் கடையில் வாங்கும் ஏதேனும் ஒரு உணவில் வெண்ணெய் இருக்கிறது.
அதிக வெண்ணெய் உடலுக்கு ஆபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும்.அதேபோல் சிலர் சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துகின்றனர்.இது முற்றிலும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயமாகும்.சிலர் பல வருடங்களாக ஒரே வகை எண்ணையை பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் உடல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.கடுகு எண்ணெய்,வேர்க்கடலை எண்ணெய் போன்றவற்றை அளவாக பயன்படுத்தி வந்தால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.