கோழிக்கு கஞ்சா தீவினமா?அதனால் ஏற்படும் நன்மை என்னவென்று தெரியுமா?
உலகில் மிகச் சிறந்த நாடக மற்றும் சுற்றுலாத்தலமாக தாய்லாந்து விளங்குகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலில் கஞ்சா சிக்கன் என்ற ஒரு விஷயம் மிகப்பெரிய அளவில் வைரலாக பரவி வருகிறது.இதைத்தொடர்ந்து கஞ்சாசிக்கன் சில வருடத்தில் இந்தியா,அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா என உலகில் பல நாடுகளில் கூடிய சீக்கிரம் சந்தைக்கு புலப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு தாய்லாந்தில் மருத்துவர்கள் மருத்துவத்திற்கு பயன்படும் வகையில் கஞ்சா பண்ணை ஒன்று வளர்க்கப்படுகிறது. அங்கு வளர்க்கப்படும் கோழிகளுக்கு ஆன்டிபயோடிக்கிற்குப் பதிலாக கஞ்சாவை உணவாக கொடுத்து வருகின்றனர். இவ்வகையில் ஆராய்ச்சி செய்தவர்கள் இதனை நம்பிக்கை தரும் பலனை அளித்துள்ளது என கூறியுள்ளார்கள்.
சியாங் மாய்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள விலங்குகள் மற்றும் நீர் வாழ் அறிவியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஜனவரி 2020 இல் கோழிகளின் உணவில் இந்தப் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தினார்கள். லம்பாங்கி பகுதியிலுள்ள கோழிப்பண்ணையில் ஆயிரம் கோழிகளில் பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே கோழிகள் இறந்துள்ளதாக கூறினார்கள்.
ஒரு வருடத்தில் ஆராயிச்சி செய்ததற்கான முடிவுகளை மட்டுமே பல்கலைக்கழகம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய உதவிப்பேராசிரியர் சோம்புனட் லும்சங்குல் கூறியதாவது ,கஞ்சா தீவனங்கள் ,கோழிகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.
பறவைகளை கொள்ளக்கூடிய நோய் தொற்றிலிருந்து இறப்புகள் சற்றே குறைவாக இருந்தாலும் குறுகிய கால அடிப்படையில் ஆராய்ச்சி மூலம் தெரிகிறது. மேலும் பறவைகளுக்கு சிறப்பு உணவாக தீவனங்களிலும் தண்ணீரிலும் நறுக்கப்பட்ட கஞ்சாவை சேர்த்து கொடுக்கப்பட்டு வருகிறது.ஆரோக்கியமான கோழிகளை தாண்டி இந்த கறி கோழிகளின் விலை இரு மடங்காக விற்பனை செய்யப்படுகிறது.
இயற்கையாக கிடைக்கும் கஞ்சாவை பயன்படுத்துவதால் கோழி வளர்க்கும் கோழி உரிமையாளர்களுக்கு பெரிய அளவிலான செலவுகள் குறைகிறது என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆர்கானிக் விவசாயம் உயரமாவது போல் தற்போது நிலையில் ஆர்கானிக் இறைச்சியும் உயருகிறது.
எனவே இவை தாய்லாந்தில் கஞ்சா சிக்கன் என அழைக்கப்படுகின்றது. இதனால் கோழி வளர்ப்பில் குறைவான செலவில் இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கஞ்சா சிக்கன் உலகளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த கஞ்சா செடிகளை மக்களின் பயன்பாட்டிற்கு வந்தால் அதற்கான எதிர்வினையை பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது.
ஒரு பக்கம் வர்த்தகம், லாபம் மற்றும் உணவு ஆகியவற்றை பார்க்க வேண்டிய நிலையில் மறுபக்கம் மக்களின் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டிய கட்டாயமாகிறது. ஆசியாவிலேயே முதல் நாடாக கஞ்சாவை விற்பதும், வளர்ப்பதும் சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து அரசு தான் அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் தாய்லாந்து அரசு 2 பில்லியன் டாலர் மதிப்பில் தொழில்துறையை உருவாக்கும் என நம்புகிறது.
அதேசமயம் கஞ்சாவை பொழுதுபோக்கிற்காக உபயோகிக்க கூடாது என அந்நாட்டு அரசு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தாய்லாந்து மருத்துவ நோக்கத்திற்காக மட்டும் கஞ்சாவை பயன்படுத்த அனுமதி அளிக்கின்றது. அதற்கான 2018 ல் சட்டம் கொண்டுவரப்பட்டது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் மருத்துவ சிகிச்சைக்காக இதனை பயன்படுத்தலாம் எனவும் அதனால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அனுடின் சார்ன் விரகுள் கூறியுள்ளார்.