உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது காபியா? இல்லை தேநீரா? ஹெல்த் நல்லா இருக்க கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!!

0
89
Is coffee good for health? No tea? Must know for good health!!
Is coffee good for health? No tea? Must know for good health!!

காலையில் உடல் சோர்வை போக்கி புத்துணர்வுடன் இருக்க காபி,டீ போன்ற பானங்களை பலரும் விரும்பி குடிக்கின்றனர்.இதில் சிலர் காபி பிரியராக இருப்பார்கள்.சிலர் டீ பிரியராக இருப்பார்கள்.இந்தியர்கள் தினமும் காபி அல்லது டீயுடன் தங்கள் நாளை தொடங்குகிறார்கள்.காபி,டீ உடலுக்கு எனர்ஜி தரக் கூடிய ட்ரிங்க் என்று கருதுகிறார்கள்.

டீயில் க்ரீன் டீ,பிளாக் டீ,ஹெர்பல் டீ என்று பல வெரைட்டிகள் இருக்கிறது.குறிப்பாக க்ரீன் டீ,பிளாக் டீயில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது.இது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.இதய நோய்கள் வராமல் இருக்க தினமும் க்ரீன் டீ பருகலாம்.இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படமால் இருக்க இரத்த அழுத்தம் குறைய க்ரீன் அல்லது பிளாக் டீ பருகலாம்.

மன அழுத்தம் ஏற்பாடாமல் இருக்க தினமும் ஒரு கப் டீ குடிக்கலாம்.இதில் இருக்கின்ற தியானின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.மன அழுத்தம் நீங்கி மன ஆரோக்கியம் மேம்பட டீ அருந்தலாம்.

அதேபோல் காலை நேரத்தில் காபி குடித்தால் உடல் சோர்வு நீங்கி உடல் புத்துணர்வாக இருக்கும்.காபியில் உள்ள காஃபின் உடல் மற்றும் மனதிற்கு ஆற்றலை வழங்குகிறது.காபியில் உள்ள காஃபின் நினைவாற்றலை பெருக்க உதவுகிறது.மூளையில் செயல்திறனை ஊக்குவிக்க காபி பருகலாம்.காபி குடிப்பதால் இதய செயலிழப்பு,கல்லீரல் அபாயம் போன்றவறை குறையும்.ஆனால் இரண்டிலும் காஃபின் என்று வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது.

டீயை ஒப்பிடுகையில் காபியில் அதிகளவு காஃபின் இருக்கிறது.தூக்கமின்மை,மன அழுத்தம் போன்ற பாதிப்புகளை காஃபின் ஏற்படுத்திவிடும்.எனவே காபியை ஒப்பிடுகையில் டீயில் காஃபின் குறைவாக இருப்பதால் இது சிறந்த பானமாக கருதப்படுகிறது.அதேசமயம் காபி பிரியர்கள் குறைவான அளவு எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது.

Previous articleஇந்திய அஞ்சல் துறையில் எக்ஸிக்கியூட்டிவ் பணி!! 30 ஆயிரம் சம்பளம் வாங்க அக்டோபர் 31க்குள் விண்ணப்பியுங்கள்!!
Next articleஉடல் எடையை கடகடன்னு குறைக்கும் 6 மேஜிக் ட்ரிங்க்ஸ!! ஒரே வாரத்தில் மூன்று கிலோ குறையும்!!