எப்படி இருக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரைலர்?

எப்படி இருக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரைலர்?

தனுஷ் நடிப்பில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தற்போது நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களில் பிஸியாக நடித்து வந்த போதிலும் தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி அந்த படத்துக்கு கதையையும் தானே எழுதினார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இதில் முதல் படமாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தில் தனுஷுடன் பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா , நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்புவரை தனுஷ் கவலை இல்லாத இளைஞராக, வீட்டில் தன் அப்பாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு சுய இரக்கத்தோடு வாழும் இளைஞராக பல படங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது திருச்சிற்றம்பலம்.

படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே நடக்கும் மோதல் மற்றும் பாசப் போராட்டமே கதைக்களமாக இருக்கும் என தெரிகிறது. தனுஷுக்கு தாத்தாவாக பாரதிராஜா நடித்துள்ளார். கலர்புல்லான இந்த டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

Leave a Comment