யாராலும் அதிமுகவை வீழ்த்த இயலாது! எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

0
78

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற சமயத்தில் அவர் தமிழக முதல்வராக முதன்முதலாக பொறுப்பேற்றார் என்ற மகிழ்ச்சியை விடவும் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதை திமுகவின் உடன்பிறப்புகள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.

அடுத்த எதிர்கட்சிகளை அவர் யார் என்ற போட்டி பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரிடையே இழந்தபோது பன்னீர்செல்வத்திற்கு திமுக பகிரங்க ஆதரவு தெரிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை இழுத்து விட இயலாது என திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிமுகவின் சார்பாக நடைபெற்ற வரவேற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

மேலும் அவர் பேசும்போது ஸ்டாலின் குடும்பத்திற்காக ஆட்சி செய்கிறார், அதிமுக ஜனநாயக கட்சி இலங்கையின் இன்றைய நிலைமையை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் ஆட்சி நடத்த வேண்டும். விலைவாசி உயர்வு தொடர்பாக கவலைப்படாமல் ஸ்டாலின் போட்டோ சூட் நடத்துகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஸ்டாலின் முதலமைச்சராகிவிட்டார் என தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்து 14 மாதங்கள் சென்ற பிறகும் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்த ஒரு நல்ல திட்டமும் இதுவரையில் நிறைவேற்றவில்லை. அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது ஆட்சியிலிருந்தாலும், இல்லையென்றாலும், மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் கட்சி அதிமுக. மக்கள் காவிரி வெள்ளத்தில் சிக்கிய போது அரசு சார்பாக யாரும் சென்று பார்க்கவில்லை.

ஸ்டாலினுடன் ஒன்றிணைந்து அதிமுகவிற்கும் தொண்டர்களுக்கும் துரோகம் செய்தவர்கள் கோவிலாக கருதும் அதிமுகவின் தலைமை அலுவலகத்தை காலால் உதைத்து உள்ளே சென்று அங்கே இருக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் சென்றார்கள்.

திருட்டுத்தனமாக அவற்றை எடுத்துச் சென்றது யார் என தெரிந்தும் தமிழக அரசு இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

பலம் மிக்க அதிமுகவிற்கு இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை மோசமாக இருக்கிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் விரோத அரசு எப்போது முடியும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர் பி உதயகுமார், அமைப்பு செயலாளர் மருதராஜ், ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் குப்புசாமி மற்றும் நிர்வாகிகள் வேணுகோபால், பரமசிவம், ரவி மனோகரன், முருகானந்தம், அன்வர் தீன், உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள்.