Dewali: தீபாவளி பண்டிகை கொண்டாட பலவகையான புராணகதைகள் உள்ளன உண்மையில் தீபாவளி இந்துக்கள் பண்டிகையா.
தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பண்டிகை . இந்தியா முழுவதும் பரவலாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தீபாவளி பண்டிகைக்கு பின் இருக்கும் புராண கதைகள் ஏராளம்.
இந்தியா முழுவதும் இந்த தீபாவளி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தீபாவளி எப்படி உருவானது என்பதற்கு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது.
இந்த தீபாவளி பண்டிகை வட இந்தியாவில் ராமர் ராவணனை அளித்து அயோத்தி திரும்பிய போது ராமர் சீதா லட்சுமணன் வருகையின் போது விளக்கேற்றி வரவேற்தது கொண்டாடினர். அதனால் அந்த தினத்தை தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. மேலும் கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த தினம் தீபாவளி என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் அயோத்திதாசர் தீபாவளி பண்டிகை ஒரு பௌத்த பண்டிகை அதை பிராமணர்கள் திருடி கொண்டார் என்று கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறார். ஆனால் மயிலை சீனி.வேங்கடசாமி சமண சமயத்தின் மகாவீரர் முக்தி அடைந்த நாளன்று தீபாவளி விடியற்காலை கொண்டாடப்படுகிறது, எனவே சமணர்களிடம் இருந்து இந்துக்கள் பெற்ற பண்டிகை தான் தீபாவளி என்கிறார்.
ஆனால் பெரும்பாலானவர்கள் ஒரு பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் போது அது எங்கிருந்து வந்தது, அதை நாம் கொண்டாடலாமா? என்ற ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு உங்களுக்கு விருப்பமிருந்தால் கொண்டாடுவதே சிறந்தது என்கிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியம்.