காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?

Photo of author

By Divya

காபி குடிப்பது இதயத்திற்கு நல்லதா? ஒருநாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்?

Divya

உலகில் உள்ள பெரும்பாலானோர் காலை நேரம் காபியுடன் தான் தொடங்குகிறது.காபி ஒரு சிறந்த புத்துணர்வு ஏற்படுத்தும் பானமாக இருப்பதால் காலை சோர்வை போக்க இந்த பானத்தை குடிக்கின்றனர்.சிலருக்கு காலை உணவே காபியாகத்தான் இருக்கிறது.பிஸியான உலகில் காலை நேரத்தில் பெரும்பாலானோர் உணவு உட்கொள்வதே இல்லை.காலையில் குடித்த காபியோடு வேலைக்கு ஓடுகின்றனர்.

சிலர் ஒருநாளைக்கு 10 முதல் 15 காபி குடிக்கின்றனர்.இப்படி காபிக்கு அடிமையானால் அது நம் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும்.

வீட்டில் மட்டுமின்றி வெளியில் வேலை செய்பவர்களுக்கும் அதிகமாக காபி குடிக்கின்றனர்.ஊழியர்கள் சோர்வை போக்க அலுவலகத்தில் மெஷின் காபி குடிக்கின்றனர்.இப்படி தினசரி வாழ்வில் காபி குடிப்பது இரத்தத்தில் ஊறிப்போன விஷயமாக மாறிவருகிறது.

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்குவதற்கு முன்னர் வரை காபியை ஒரு உணவாகவே சிலர் எடுத்துக் கொள்கின்றனர்.காபி உடலுக்கு சில நன்மைகள் கொடுக்கும் என்றாலும் இதை அதிகமாக குடித்தால் உடலில் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும்.

அதேபோல் காபியில் உள்ள காஃபின் என்ற கெமிக்கல் இதய ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்யும்.அதிக காஃபின் நிறைந்த பனமான காபி தலைவலி,குமட்டல்,வாந்தி,தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அளவிற்கு அதிகமாக காபி குடித்தால் இதயத் துடிப்பில் மாற்றம் ஏற்படும்.காஃபின் நிறைந்த காபி மன அழுத்தத்தை அதிகரிக்கும்.அளவிற்கு அதிகமாக காபி குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.காபியில் உள்ள சர்க்கரை உடலில் குளுக்கோஸ் அளவை உயர்த்தி நீரிழிவு நோய்க்கு வழிவகுத்துவிடும்.

தினமும் இரண்டு அல்லது மூன்று கப் காபி குடித்தால் எந்த பிரச்சனையும் இல்லை.அதைவிட அதிகமாக குடித்தால் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.அதேபோல் பால்,சர்க்கரை சேர்க்காத பிளாக் காபி செய்து பருகினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.