பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பனம்பழம்,நுங்கு,பதநீர்,பனங்கிழங்கு உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.இதில் பனை விதையில் இருந்து கிடைக்கும் பனங்கிழங்கு உடலுக்கு அவ்வளவு நன்மைகள் கிடைக்கும்.
பனங்கிழங்கில் நார்ச்சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பனங்கிழங்கை அவித்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு குணமாகும்.பனங்கிழங்கை வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
பனங்கிழங்கை பொடித்து சாப்பிட்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.வேக வைத்த பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.பனங்கிழங்கில் இருக்கின்ற வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
அஜீரணக் கோளாறு சரியாக பனங்கிழங்கு பொடியை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.உடலில் ஓட்டம் சீராக பனங்கிழங்கை பொடித்து சாப்பிடலாம்.மலச்சிக்கல் பாதிப்பு குணமாக பனங்கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம்.மூல நோய் பாதிப்பு குணமாக பனங்கிழங்கை பொடித்து சாப்பிடலாம்.
உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க பனங்கிழங்கை அடிக்கடி சாப்பிட வேண்டும்.எலும்புகளின் வலிமை அதிகரிக்க பனங்கிழங்கை வேகவைத்து உட்கொள்ளலாம்.நீரிழிவு நோய் கட்டுப்பட பனங்கிழங்கை அவித்து சாப்பிடலாம்.
சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக பனங்கிழங்கை பொடித்து உட்கொள்ளலாம்.மாரடைப்பு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பனங்கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம்.பனங்கிழங்கை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.