கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா??

0
118

கடவுளுக்கு தேங்காய் உடைப்பதில் இவ்வளவு விசேஷமா??

நம் வாழ்வில் ஏற்படும் தடைகள் அத்தனையும் நீங்கி விட வேண்டும் என்பதற்காக சிதறு தேங்காய் உடைக்கிறார்கள். தேங்காய் உடைக்கும்போது சிறு சிறு துண்டுகளாக சிதறுகின்றன. தேங்காய் சிதறும் போது நம் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளும் சிறு சிறு துண்டுகளாக உடைக்கப் படுகின்றன.

முதலில் நாம் அனைவரும் விநாயகருக்கு மட்டுமே தேங்காய் உடைக்க வேண்டும் என எண்ணுவது தவறு. மேலும் சில பகுதிகளில் முருகனுக்கும், அம்மனுக்கும் மற்றும் மாரியம்மனுக்கும் கூட சிதறு தேங்காய் உடைப்பார்கள்.

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் முதலில் தேங்காய் உடைத்துவிட்டு தான் செல்வார்கள். அதில் பயணத்தைத் துவக்கும்போது ஒரு தேங்காய் உடைப்பார்கள், எரிமேலி சாஸ்தா ஆலயத்தில் ஒரு தேங்காய் உடைப்பார்கள், கன்னி மூலை கணபதி சந்நதியில் ஒரு தேங்காய் உடைப்பார்கள், பதினெட்டாம் படியில் ஏறுவதற்கு முன்னால் ஒரு தேங்காய் உடைப்பார்கள், பயணம் முடித்து திரும்பவும் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் ஒரு தேங்காய் உடைப்பார்கள் இவை அனைத்தும் முதலில் உடைத்து விட்டு தான் ஆரம்பிப்பார்கள்.

மேலும் கருப்பண்ண சுவாமிக்கும் சிதறு தேங்காய் உடைப்பது என்பது நம் தமிழர்களின் வழக்கம். இம்மலைக்கு செல்வோரை முதலில் திருஷ்டி சுற்றி போடும்போதும் சிதறு தேங்காய் உடைப்பார்கள்.

மொத்தத்தில் கண் திருஷ்டியாக இருந்தாலும் சரி, வேறு ஏதேனும் தோஷம் பீடித்திருந்தாலும் சரி, காரியத்தடை ஆக இருந்தாலும் சரி, எல்லாவிதமான இடையூறுகளும் தகர்ந்து எளிதில் வெற்றி பெற வேண்டும் என்பதே சிதறு தேங்காய் உடைப்பதன் நோக்கம் ஆகும்.

விக்னம் எனும் தடையை நீக்குபவன் விக்னேஸ்வரன் என்பதால் பெரும்பான்மையாக விநாயகர் கோயிலில் சிதறு தேங்காய் உடைக்கும் பழக்கம் உண்டாகி இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் சிதறு தேங்காய் உடைக்கப்படுவது போல் உங்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் உதறி போய்விடும் என்பது நம் நம்பிக்கையாகும்.

Previous articleகொழுந்துவிட்டு எரிந்த தீ.. அணைக்க முடியாமல்! திணறும் தீயணைப்பு வீரர்கள்!
Next articleபத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!!