நம் உடல் எலும்பு ஆரோக்கியமாக இருக்க கால்சியம் சத்து அவசியமான ஒன்றாகும்.நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது.நம் உடல் எடையில் 2% கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.
அப்படிப்பட்ட கால்சியம் சத்து நமது உடலில் குறையும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.கால்சியம் சத்து குறைந்தால் உடல் சோர்வு அதிகமாகிவிடும்.எலும்புகள் வலிமை குறைந்துவிடும்.இதனால் முதுகு வலி,இடுப்பு வலி,மூட்டு வலி,கை கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
கால்சியம் சத்து குறைந்தால் உடல் பலவீனமானது போன்ற உணர்வு ஏற்படும்.தசைகள் தளர்ந்து கை கால் மரத்து போதல் அதிகமாகும்.
முடி உதிர்வு,நகங்களில் விரிசல் ஏற்படுதல்,நகங்கள் உடைதல்,நரம்பு பிரச்சனைகள் ஏற்படும்.பல் வலிமைக்கு கால்சியம் சத்து அவசியமான ஒன்று.அப்படி இருக்கையில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் பல் சிதைவு,பல் உடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் தூங்குவதில் சிரமம் ஏற்படும்.
உடலில் வைட்டமின் டி சத்து குறைந்தால் கால்சியம் குறைபாடு ஏற்படும்.இது தவிர தைராய்டு பாதிப்பு,மோசமான உணவுப் பழக்கம்,கிட்னி சம்மந்தபட்ட பிரச்சனைகளால் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.
உணவின் மூலம் மட்டுமே உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க முடியும்.பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.தினமும் ஏதேனும் ஒரு பால் பொருளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.
வேகவைக்கப்பட்ட முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற முடியும்.கீரைகளில் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு கீரை உணவை உட்கொண்டால் கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.
அத்தி பழத்தை உலர வைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் கால்சியம் சத்து கிடைக்கும்.அதேபோல் தேன் நெல்லி சாப்பிடுவதால் கால்சியம் சத்து கிடைக்கும்.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகரிக்கும்.
வெண்ணையில் ராகி லட்டு செய்து சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரிக்கும்.அதேபோல் எள் ஏகப்பட்ட கால்சியம் சத்தை கொண்டிருக்கிறது.இதை லட்டு செய்து சாப்பிடுவதால் கால்சியம் சத்தை அதிகரிக்கலாம்.கடல் மீன்களை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெற முடியும்.