ஹோட்டல் உணவு சரி இல்லையா?? உடனடியாக புகார் அளித்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்!!
நாம் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்று நமக்கு வழங்கப்பட்ட உணவில் ஏதேனும் பூச்சி இறந்த உயிரினங்கள் இருந்தால் அதைப் பற்றி நாம் புகார் தெரிவிக்க நமக்கு முழு உரிமை இருக்கிறது. அதாவது Prevention of food adulteration சட்டப்படி நாம் சாப்பிடக்கூடிய உணவில் பூச்சிகள் இருப்பது, கலப்படம் நடந்திருப்பது, குடிக்கக்கூடிய தண்ணீர் சரியில்லாமல் இருப்பது, சாப்பிட்ட உணவால் அஜீரணக் கோளாறு ஏற்படுவது, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பது, மற்றும் எங்கள் உணவுப் பொருளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று பொய்யாக விளம்பரம் செய்வது என அனைத்தையும் இந்த சட்டத்தின் கீழ் நாம் புகார் கொடுக்க முடியும்.
இதைப் பற்றி புகார் அளிக்க 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகாரை அளிக்கலாம். இந்த புகார் சென்னையில் உள்ள ஆபீஸ் இருக்கு செல்லும் பிறகு அவர்கள் எந்த பகுதியில் இது நடந்தது என்பது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
இல்லையென்றால் இது குறித்து புகார் அளிப்பதற்கு ஒரு இணையதள முகவரி உள்ளது. foscos.fssai.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று நம்முடைய மாவட்டம் மற்றும் மாநில முகவரியை தந்தவுடன் நம்முடைய பகுதியின் உணவுத்துறை அதிகாரியின் மெயில் ஐடி வரும். இவரின் மெயில் ஐடிக்கு சென்று நம்முடைய புகாரை பதிவிடலாம்.
அதேபோல இந்த புகாரை நம் மொபைல் போன் மூலமாகவும் பதிவிடலாம். நம்முடைய மொபைலில் ப்ளே ஸ்டோர் சென்று அதில் Food connect app என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கக்கூடிய முகவரிகளை தந்தவுடன் நம்முடைய புகார் அதில் பதிவாகிவிடும்.
நம்முடைய வீட்டின் அருகே இருக்கக்கூடிய உணவகம் நாம் குடிக்கக்கூடிய கேன் வாட்டர் என அனைத்தும் தரமாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க உணவுத்துறை அதிகாரிக்கு ஒரே ஒரு தகவலை அனுப்பினாலே போதும். அவர்கள் 14 நாட்களுக்குள் இவை அனைத்தையும் சரிபார்த்து உங்களுக்கு அனுப்பி விடுவார்கள்.
மேலும் உணவகம் மற்றும் கேன் வாட்டரை அவர்கள் சரிபார்த்துவிட்டு அதற்கு எவ்வளவு அபராதம் விதித்தோம் என்னென்ன கலப்படம் நடந்து இருக்கிறது என்பது குறித்து அத்தனை விவரங்களையும் நமக்கு அனுப்பி விடுவார்கள். இதுபோன்றே சமீப காலத்தில் சென்னையில் உள்ள ஒரு உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென இன்ஸ்பெக்ஷன் சென்றது குறிப்பிடத்தக்கது.
Food safety and standards என்ற சட்டத்தின் படி நாம் ஒரு ஹோட்டலில் தயாரித்து இருக்கக்கூடிய உணவை சாப்பிட்டு இறந்து விட்டால் அவரின் குடும்பத்திற்கு ஹோட்டல் சார்பாக 50 லட்சம் ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். இறந்து போகாமல் சீரியஸான நிலையில் இருந்தால் குறைந்தபட்சம் மூன்று லட்சம் ரூபாயை அபராத தொகையாக வழங்க வேண்டும்.
அதேபோல அந்த ஹோட்டல் உணவை சாப்பிட்டு நமக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராத தொகை வழங்க வேண்டும் அதுவும் ஆறு மாதத்திற்குள் இதை வழங்கியாக வேண்டும்.