உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!!

0
35

உங்கள் போன் நம்பரை கொடுக்கவே கொடுக்காதீங்க!! சொன்னது இதுக்குத்தான்!!

இன்றைய காலகட்டத்தில் மோசடிகள் என்பது மிக அதிக அளவில் நடக்கிறது. தற்போது உள்ள சூழலில் குற்றங்கள் என்பது பெருகிக்கொண்டே செல்கின்றது.

அந்த வகையில் நீங்கள் செய்யும் அல்லது நீங்கள் தரும் ஒரு தவறுகள் கூட உங்களது வாழ்க்கையே புரட்டிப் போடும் அளவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

தற்போது உள்ள ஸ்மார்ட் போன்களின் காலத்தில் நீங்கள் பரிமாறிக் கொள்ளும் சிறிய தகவல் கூட உங்களுக்கு தீங்காக வந்து முடிய அதிக வாய்ப்புகள் உண்டு.இதிலும் சிலர் அறியாமல் செய்யும் பல தவறுகளால் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

அது போன்று தான் தெரியாத நபர்களுக்கு புகைப்படம் அனுப்புவது அவர்களுடன் பேசுவது தொலைபேசி எண்ணை கொடுப்பது சமூக இணையதளங்களில் உள்ள செயலிகளின் மூலம் அவர்களுடன் நட்பு ஈடுபடுவது இதுபோன்று செய்யும் சில தவறுகளால் பல பாதிப்புகளும், குற்றங்களும் மோசடிகளும் நடைபெறுகின்றது.

பொதுமக்கள் பலர் ஒரு தகவலை நம்மிடம் இருந்து பெற விரும்புகிறார்கள் என்றால் அவர்களுக்கு அதில் என்ன பயன் இருக்கும் என்பதை கட்டாயமாக ஆராய வேண்டும். இதன் மூலம் தான் பல மோசடிகளை நம்மால் தவிர்க்க முடியும்.

முதலில் நீங்கள் எந்த ஒரு இடத்திலும் தேவையின்றி உங்களது தொலைபேசி எண்ணை கொடுத்து விடாதீர்கள். தொலைபேசி எண் தானே இதில் என்ன ஆகப் போகின்றது என்று நினைத்தால் அது உங்களின் பெரிய முட்டாள்தனம்.

நீங்கள் செல்லும் கடைகள் மால்கள் போன்றவற்றில் கூப்பன் கொடுக்கின்றோம் என்று தொலைபேசி எண்ணை கேட்டால் அந்த இடத்தில் கவனமாக இருங்கள் இதன் மூலம் பெரிய மோசடி நடப்பதற்கான வாய்ப்பு உண்டு.

சமீபத்தில் டெல்லி ஏர்போர்ட்டில் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவர் கம் வாங்குவதற்காக கடைக்கு சென்று உள்ளார் அப்பொழுது அவரிடம் தொலைபேசி எண்ணை கடைக்காரர் கேட்டுள்ளார்.

மேலும் அவர் கடைக்காரரிடம் முறையான தகவலை கேட்டுள்ளார் அவரும் அதற்கு முறையாக பதில் சொல்லாததால் எந்த ஒரு பொருளையும் வாங்காமல் வந்து விட்டார்.

இது குறித்தும் மத்திய அரசு ஆனது எந்த கடைகளிலும் உங்களது தொலைபேசி எண்ணை கேட்டால் முதலில் அதற்கான காரணத்தை நீங்கள் கேட்டு அறிந்த பின்பு செயல்படுங்கள் என்றும் DPDP பில் என்கின்ற சட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் எந்த ஒரு தனி நபரின் தகவல்களை சேகரிக்கும் அந்த நிறுவனம் அவற்றை வெளியிட்டால் 500 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இனிவரும் காலகட்டத்தில் இந்த புதிய அம்சத்தின் மூலம் தனிநபரின் தகவல்களை சேகரிப்பது என்பது வெளிப்படை தன்மையுடனும் உண்மை தன்மையுடனும் அமையும் என்று கருதப்படுகிறது.

author avatar
Parthipan K