அரசின் புதிய பரிந்துரையா அல்லது திசை திருப்புகிறதா? முன்னெச்சரிக்கை தேவை!!

Photo of author

By Gayathri

அரசின் புதிய பரிந்துரையா அல்லது திசை திருப்புகிறதா? முன்னெச்சரிக்கை தேவை!!

Gayathri

Is it a new government recommendation or a diversion? PRECAUTION NEEDED!!

ஹச்.எம்.பி.வி வைரஸ் முதலில் சீனாவில் பரவியதை தொடர்ந்து, இந்தியாவில் கர்நாடகா, குஜராத்தை அடுத்து தமிழகத்திலும் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் தொற்று பரவியுள்ளது. அவர்களின் உடல்நலம் சீராக உள்ளது. மேலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2001 ஆம் ஆண்டே இந்தத் தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்றால் பயப்படத் தேவையில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருந்தால் போதுமானது என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

இந்தத் தொற்று பரவாமல் இருக்க குடும்ப நலத்துறை மற்றும் மத்திய சுகாதார அதிகாரிகளுடன் தமிழக கூடுதல் செயலாளர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. மத்திய அரசு உறுதியாக இந்த தொற்று குறித்து அச்சம் அடைய தேவை இல்லை எனக் கூறியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மக்கள் மாஸ்க் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இருமல் தும்மல் ஏற்பட்டால் வாய் மூக்கு துவாரங்களை மூடிக்கொள்ளவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த செய்தி பரவியதை தொடர்ந்து, திமுக அரசு நம்மை திசை திருப்புகிறது. அப்பொழுதுதான் நாம் “யார் அந்த சார்” என்ற விஷயத்தை மறப்போம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.