பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்..

Photo of author

By Gayathri

பல்லி நம் மேல் விழுந்தால் தோஷமா? கவலை வேண்டாம் இதோ பரிகாரம்..

நம் வீட்டில் இருக்கக்கூடிய பல்லிக்கு நம்முடைய நல்லது கெட்டது எடுத்துக் கூறும் சக்தியும், தகுதியும் இருக்குமாம். நாம் யாரிடமாவது நல்ல விஷயங்களை குறித்து பேசும்போது, பல்லி கத்தினால் நல்ல சகுனம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால், அதுவே பல்லி நம் மீது விழுந்து விட்டால் விழும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறதாம்.

இதற்கு வரலாறு கதையும் உள்ளது. அதைப் பற்றி பார்ப்போம் –

முன்னோரு காலத்தில் ஸ்ரீ சிருங்கி பேரர் என்ற முனிவரின் இரு மகன்கள், கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தார்களாம். இவர்கள் இரண்டு பேரும் தினமும் பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வருவார்கள். அப்படி ஒரு நாள் அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததாம். இதைப் பார்த்த கவுதம முனிவர் கோபம் கொண்டார். இவரையும் பல்லிகளாகும்படி சபித்து விட்டாராம். இவரின் சாபத்தால் சிஷ்யர்கள் இரண்டு பேரும் மனம் வருந்தி முனிவரிடம் மன்னித்துவிடும்படி வேண்டினார்கள். இதனால் மனம் உருகிய கௌதம முனிவர் காஞ்சி சென்றால் உங்களுக்கு பாவ விமோசனம் உண்டு என்று கூறினார்.

இதனையடுத்து, அந்த இரு சிஷ்யர்கள் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு பெருமாளிடம் மோட்சம் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த வரதராஜ பெருமாள், உங்களுடைய ஆத்மா மட்டும வைகுந்தம் செல்லும். ஆனால் உங்கள் சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களைத் தரிசித்தால் சகல தோஷம் நீங்கி மகிழ்ச்சி பெருவார்கள் என்று கூறினார். இதற்கு சூரிய, சந்திரன் சாட்சி என்று கூறி அவர்களுக்கு மோட்சம் கொடுத்தாராம்.

பல்லி தோஷம் பெற்றவர்கள் தங்க பல்லி, வெள்ளி பல்லி வழிபாடு நடத்தலாம். மேலும், காஞ்சிபுரம் சென்று அங்கு ஸ்ரீ வரதராஜப் பெருமாளை தரிசனம் செய்யலாம். இக்கோவிலில் உள்ள தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லியை தரிசித்தால் நம்முடைய பல்லி தோஷங்கள், கிரகண தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும்.

மேலும், பல்லியை கொலை செய்வதன் மூலம் ஏற்படும் தோஷம், இக்கோவிலில் உள்ள பல்லி உருவங்களை தொட்டு வணங்கினால் அந்த தோஷம் விலகிவிடுமாம்.