கடை தயிர் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் காரணமா? அதிரச் செய்யும் உண்மை இதோ!!

Photo of author

By Divya

கடை தயிர் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல் காரணமா? அதிரச் செய்யும் உண்மை இதோ!!

Divya

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புரோபயாட்டிக் உணவுகளில் ஒன்று தயிர்.இதை பாலில் உறைமோர் ஊற்றி தயாரிக்கின்றனர்.தயிர் சற்று புளிப்பு நிறைந்த சுவையான உணவுப் பொருளாகும்.ஆனால் தயிரை நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்த முடியாது.

வீட்டு தயிர் சீக்கிரம் புளித்துவிடும்.ஆனால் கடையில் விற்கும் தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போவதில்லை.கடை தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஏதேனும் இரசாயனம் கலக்கப்படுகிறதா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.கடையில் வாங்கும் தயிர் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதனாலே சந்தேகம் ஏற்படுகிறது.

கடை தயிர் கெட்டுப்போகாமல் இருக்க கெமிக்கல் காரணம் இல்லை என்று ஊட்டச்சத்து நிபுணர் அருண்குமார் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.பால் லாக்டோபாகிலஸ் என்ற நல்ல பாக்டீரியாக்களை கொண்டிருக்கிறது.

பாலில் இருக்கின்ற இந்த பாக்டீரியா இனப்பெருக்கம் செய்யும்.இந்த சமயத்தில் லாக்டோஸ் லாக்டிக் அமிலமாக மாறும்.இதனால்தான் தயில் புளிப்பு சுவையை கொண்டிருக்கிறது.நம்முடைய வீட்டில் தயாரிக்கும் தயிர் சீக்கிரம் கெட்டுப்போக காரணம் நாம் செய்யும் செய்யும் தவறுகள்தான்.

தயிர் பாத்திரத்தில் அதிக பாக்டீரியாக்கள் இருந்தாலோ அல்லது உறைமோரில் பலவகை பாக்டீரியாக்கள் இருந்தாலோ அவை சீக்கிரம் புளித்துவிடும்.இதனால் தயிர் எளிதில் புளித்துவிடுகிறது.ஆனால் கடை தயிர் தயாரிப்பில் எந்த பாக்டீரியா வேண்டுமோ அதை மட்டும் சேர்ப்பார்கள்.மற்ற பாக்டீரியாக்களை நீக்கிவிடுவார்கள்.கடை தயிர் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருக்க இதுவே காரணம்.

பாலுக்கு எவ்வளவு லாக்டோபாகிலஸ் தேவைப்படுகிறது என்பதை சரியான முறையில் கணக்கீடு செய்து சேர்ப்பதால் அவை சீக்கிரம் கெடுவதில்லை என்று மருத்துவர் அருண்குமார் தெரிவித்திருக்கிறார்.