வரைபடத்தில் மட்டும் இருந்தால் போதுமா!! மத்திய பட்ஜெட்டில் வேண்டாமா!!

Photo of author

By Gayathri

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கள ஆய்வு கண்டு வருகிறார். அவர் சமீபத்தில் நெல்லைக்கு சென்று இருந்தார். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாட்டா நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். நெல்லையில் இரண்டாவது நாளாக இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நதிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக 169 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கி அதன் பணிகளை திறந்து வைத்துள்ளார்.

மேலும், அப்பகுதியில் 20 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். அதனைத் தொடர்ந்து திடலில் பேசிய அவர், தமிழ்நாட்டிற்காக மத்திய அரசு எந்த ஒரு நிதியும் ஒதுக்க கிடையாது. மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதியும் தருவதில்லை! நீதியும் தருவதில்லை! ஓட்டு கேட்க மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ? என்னவோ? திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா உலகம் முழுவதும் ஃபேமஸ். ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கே அல்வா தந்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் இடம்பெறாததையும், 2023 ஆம் ஆண்டு புயல் காரணமாக நிதி கேட்டு வழங்காததையும் சுட்டிக்காட்டி பல விஷயங்களை ஆக்கரோசமாக பதிந்துள்ளார்.

வரைபடத்தில் இருந்தால் மட்டும் போதுமா தமிழகம்! மத்திய பட்ஜெட்டில் எங்கே போனது! என்றவாறெல்லாம் பல கேள்விகளை அடுக்கி உள்ளார். மேலும் மேலும் பெண்களின் முன்னேற்றத்தில் பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறியுள்ளார். தொழிற்பேட்டைகள் அதிகரிப்பதன் மூலம் பல பெண்களின் முன்னேற்றம் ஏற்படும். தமிழ்நாட்டிற்கு பக்க பலமாக திமுக ஆட்சி இருக்கும். அதேபோல் மக்களும் திமுக ஆட்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.