மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பாகுபாடு காட்டுவது நியாயமா? – ஊதிய உயர்வை வலியுறுத்தி  தமிழக அரசிடம் பாமக தலைவர் கோரிக்கை!

0
229
Salem - Ulundurpet highway 4 lane system. Happy motorists!
Salem - Ulundurpet highway 4 lane system. Happy motorists!

மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பாகுபாடு காட்டுவது நியாயமா? – ஊதிய உயர்வை வலியுறுத்தி  தமிழக அரசிடம் பாமக தலைவர் கோரிக்கை!

பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியமானது உயர்த்தி தாறுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால் தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறது.அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு தமிழக அரசிடம்  வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி  ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்கள் அனைவருக்கும் 10.11.2021, 10.11.2022 ஆகிய தேதிகளில் தலா 15% வீதம் மொத்தம் 30% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துப் படி ரூ.1500-லிருந்து 100% உயர்த்தி ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பயிற்சியாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வும், பிற படிகள் உயர்வும் வழங்கப்படவில்லை. ஒரே துறையில் பணியாற்றும் இரு பிரிவினரை பாகுபாட்டுடன் நடத்துவது நியாயமல்ல; இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பணி ஆணையும், ஊதிய உயர்வும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதர துறைகளில் ஊதிய உயர்வு அளித்த தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வை அளிக்காமல் உள்ளனர்.அதேபோல அகவிலைப்படியும்,வேலை நியமன ஆணையும் வழங்காமல் உள்ளனர்.இவர்களும் பல வருடம் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது.ஆகையால் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleஇவர்களுக்கும் இனி சீருடை! உயர்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு! 
Next articleஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்!