ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எஸ்பிபி உடன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.
எனவே அந்த நிகழ்ச்சிபங்கேற்ற பாடகி மாளவிகா மற்றும் அவருடைய குடும்பத்தினரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
இதன் மூலம் பாடகி மாளவிகா தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா தொற்றை பரப்பி உள்ளார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தற்போது ஒரு பேட்டியில் பகிரங்கமாக விளக்கம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ”கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த ஐந்து மாதங்களும் நான் வீட்டிலே எனது குழந்தை கணவன் மற்றும் வயதான பெற்றோர்களுடன் வசித்து வந்தேன். ஐந்து மாதத்துக்கு பிறகு முதல் முறையாக எஸ்பிபி பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நானும்கலந்து கொண்டேன்.
அப்படி என் மூலம்தான் எஸ்பிபி க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று சொன்னீர்கள் ஆனால் என்னுடன் அறையில் தங்கியிருந்த மூன்று பாடகிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. ஏன் என்ற கேள்வியை முன் வைத்தார்.
ஆனால் அந்த நிகழ்ச்சியில் எஸ்பிபி உட்பட பங்கேற்ற சிலருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், நானும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன்.
அந்த சோதனையின் முடிவு ஆகஸ்ட் 8-ம் தேதி வந்த நிலையில் எனக்கும் என்னுடைய பெற்றோருக்கும், என்னுடைய குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. என்னுடைய கணவனுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தது.
அதன்பின் சிகிச்சைக்காக நாங்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும். இப்படி இருக்கும் நிலையில் தேவையில்லாமல் தயவு செய்து என்னை வைத்து பரப்ப வேண்டாம் என்று அதில் கேட்டுக் கொண்டார்.