சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான வாட்சன் தனிமைப்படுத்திக் கொண்டார்

0
186
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும்  செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது . இதற்காக  எல்லா அணிகளும் துபாய் சென்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள்  நேரடியாக துபாய் சென்றுவிடுகிறனர்.
சிஎஸ்கே அணி வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் துபாய் சென்றார்கள். துபாய் சென்றதும் அவர்கள் ஏழு  நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.கொரோனா பரிசோதனை முடிவு நெகடியு  வந்தபின் அணியாக ஒன்று சேர்ந்து பயிற்சி செய்வார்கள். சிஸ்கே -வின்  ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன் நேற்று துபாய் சென்றடைந்துள்ளார். அங்குள்ள புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபாயில் உள்ள அறை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கூறுகையில்;- அவர்    வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் ‘‘நான் சில உடற்பயிற்சிகளை செய்ய இருக்கிறேன். அறைகளில்  பயிற்சி மேற்கொண்டு சிஎஸ்கே பயிற்சிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஐபிஎல் தொடருக்காக மீண்டும் ஒருமுறை வந்துள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். ஷேன் வாட்சன் வெளியிட்டுள்ள வீடியோவை ரீ-டுவீட் செய்துள்ள சிஎஸ்கே  ‘‘வாட்சன் 7-உடன் இன்னிங்சை தொடங்குவார்’’ என்று அதில் கூறிள்ளது.
Previous articleஎன்னிடமிருந்து தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா பரவியது? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பாடகி!
Next articleஇந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்!ஆயுஷ் செயலருக்கு கிளம்பும் எதிர்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here