குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்ப பானமாக ABC ஜூஸ் உள்ளது.ஆப்பிள்,பீட்ரூட்,கேரட் ஆகிய மூன்று காய்களை கொண்டு தயாரிக்கப்படும் இந்த ABC ஜூஸ் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
ABC ஜூஸ்,ABC மால்ட் என்று எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் அவை நமக்கு ஆரோக்கியத்தையே கொடுக்கும்.
ABC ஜூஸ் ஊட்டச்சத்துக்கள்:
1)மாங்கனீசு
2)ஜிங்க்
3)வைட்டமின்கள்
4)காப்பர்
5)பாஸ்பரஸ்
6)பொட்டாசியம்
7)மெக்னீசியம்,
8)இரும்பு
9)நியாசின்
10)பீட்டா கரோட்டின்
ABC ஜூஸ் நன்மைகள்:
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சருமம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் நீங்கும்.சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.செரிமானப் பிரச்சனை அனைத்தும் சரியாகும்.
கோடை கால் நோய்களை இந்த ஜூஸ் மூலம் தடுத்துவிடலாம்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த ABC ஜூஸ் பருகலாம்.
தலை முடி பராமரிப்பிற்கு இந்த ஜூஸ் பெரிதும் உதவியாக இருக்கிறது.இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இந்த ABC ஜூஸ் பருகலாம்.கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
ABC ஜூஸ் தீமைகள்:
சிலருக்கு இந்த ஜூஸ் ஒவ்வாமையை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.சிறுநீரகம் சம்மந்தபட்ட பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஜூஸை தவிர்ப்பது நல்லது.
இந்த ABC ஜூஸை அளவிற்கு அதிகமாக பருகினால் சிறுநீரக நோய் வரக் கூடும்.குடல் அலர்ஜி,குடல் எரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஜூஸை தவிர்ப்பது நல்லது.நீரிழிவு நோய் உள்ளவர்கள் ABC ஜூஸ் பருகுவதை தவிர்க்க வேண்டும்.