உணவு உட்கொண்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது சரியானதா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.குலாப்ஜாமூன்,ஜிலேபி,மைசூர் பாக்கு,ஜாங்கிரி,இனிப்பு வடை,லட்டு என்று இனிப்புகளில் பல வெரைட்டிகள் இருக்கிறது.ஒரு சிலருக்கு தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கும்.அதேபோல் சிலருக்கு உணவிற்கு பின் இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு எடுத்துக் கொண்டால் செரிமானமாகும் என்பது பலரின் கருத்து.உணவு உட்கொள்வதற்கு முன்னர் இனிப்பு சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படாது.ஆனால் சாப்பாட்டிற்கு பிறகு இனிப்பு சாப்பிட்டால் அஜீரணப் பிரச்சனையை ஏற்படுத்தும்.

உணவு உட்கொண்ட பிறகு சர்க்கரை நிறைந்த பொருட்களை சாப்பிடும் போது வாயுத் தொல்லை,வயிறு வீக்கம் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படக் கூடும்.உணவிற்கு பிறகு இனிப்பு எடுத்துக் கொள்வதால் உங்கள் செரிமான அமைப்பு மெதுவாக செயல்படும்.

இனிப்பு உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் உணவு உட்கொண்ட பிறகு அதை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.சிலருக்கு உணவு உட்கொண்ட பிறகு ஏதேனும் ஒரு இனிப்பை சாப்பிட்டால் தான் நிறைவான திருப்தி கிடைக்கும்.

உணவு உட்கொண்ட பிறகு இனிப்பு சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாடு,நீரிழவு நோய்,இன்சுலின் எதிர்ப்பு,உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகக் கூடும்.சில வகை உணவுகள் உட்கொண்ட பிறகு இனிப்பு சாப்பிட்டால் அது அலர்ஜியாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.எனவே உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.