இன்று பலருக்கும் திடீர் தலைச்சுற்றல் பிரச்சனை ஏற்படுகிறது.படுத்தாலோ,நடந்தாலோ திடீரென்று இந்த உலகமே சுற்றவது போன்ற உணர்வு ஏற்படும்.இதை ஆங்கிலத்தில் வெர்டிகோ என்று அழைப்பார்கள்.
தலை தானாக சுழல்வது போன்ற உணர்வு,கிறுகிறுவென்ற மயக்கம் ஏற்படுதல் போன்றவை வெர்டிகோ என்று அழைக்கப்படுகிறது.இது அனைவருக்கும் வரும் பாதிப்பு இல்லை.மூளை நரம்பு பாதிப்பு இருப்பவர்களுக்கு வரக் கூடிய ஒரு பாதிப்பாகும்.
அதேபோல் காது நரம்புகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் இந்த தலைச்சுற்றல் பிரச்சனை வரும்.இந்த தலைச்சுற்றல் பாதிப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றது.ஒன்று பெரிபெரல் வெர்டிகோ.மற்றொன்று சென்ட்ரல் வெர்டிகோ ஆகும்.நமது காது நரம்பு பிரச்சனையால் ஏற்படும் தலைச்சுற்றலை பெரபெரல் வெர்டிகோ என்று அழைக்கின்றனர்.
அதேபோல் நம் மூளை நரம்பு பிரச்சனையால் ஏற்படும் தலைச்சுற்றலை சென்ட்ரல் வெர்டிகோ என்று அழைக்கின்றோம்.மூளை மற்றும் காது நரம்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது இந்த பாதிப்பு ஏற்படும்.
தலைச்சுற்றல் அறிகுறிகள்:
1)காரணம் இல்லாமல் அடிக்கடி தலைச்சுற்றுதல்
2)பேசும் பொழுது சிரமத்தை சந்தித்தல்
3)வாந்தி உணர்வு
4)குமட்டல் பிரச்சனை
5)உடல் இயக்கத்தில் மாற்றம்
இந்த தலைச்சுற்றல் பாதிப்பை 30 வயது கடந்தவர்கள்தான் அதிகம் சந்திக்கின்றனர்.குறிப்பாக பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்த தலைச்சுற்றல் பிரச்சனையால் உயிருக்கு எந்த சேதம் இல்லை என்றாலும் மருத்துவரை அணுகி தீர்வு காண்பதுதான் நல்லது.
தலைச்சுற்றல் பிரச்சனை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
தினமும் அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.உடலுக்கு அவசியம் ஓய்வு தேவை.எனவே அடிக்கடி ஓய்வெடுப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.திடீர் தலைச்சுற்றல் பிரச்சனை இருந்தால் நீங்கள் உடனடியாக ஓர் இடத்தில் அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும்.
தலைச்சுற்றல் பிரச்சனை நீடித்தால் நீங்கள் ஸ்கேன் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.வெர்டிகோ பாதிப்பை அலட்சியமாக கொண்டால் நிச்சயம் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.காது தொடர்பான பாதிப்பு இருந்தால் இந்த வெர்டிகோ பிரச்சனை ஏற்படும்.
தலைச்சுற்றலில் பல வகைகள் இருப்பதால் இதை பலரும் அலட்சியமாக கடந்து பின்னாளில் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றனர்.எனவே வெர்டிகோ பாதிப்பில் இருந்து மீள நீங்கள் தங்குத மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.