மத்திய பிரதேசம் மாநிலம் காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சேர்ந்த 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மாங்கவன் காவல் நிலையத்திக்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட 20 வயது இளம்பெண் ஒருவரை காவல் ஆய்வாளர் மற்றும் 5 காவலர்கள் சேர்ந்த பாலியல் கொடுமை கொடுத்துள்ளனர். மேலும், இதுதொடர்ந்து பத்து நாட்கள் வரை அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக வெளியே சொல்லக்கூடாது என்றும், மீறினால் பொய் புகாரில் கைது செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். r இதனால் அச்சமடைந்த அந்த இளம்பெண் எதையும் வெளியே கூறாமல் இருந்தார்.
இந்நிலையில் அந்தப் பெண்ணிடம் , சிறை நீதிபதிகள் ஒருவர் ஆய்வு நடத்தியபோது தனக்கு பாலியல் கொடுமை கொடுத்ததாக கூறி புகார் கொடுத்துள்ளார் .கடந்த மே மாதம் 9-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதி வரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறினார்.
இந்த குற்றத்திற்கு அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதையும் மீறி தனக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் தன்னிடம் புகார் கூறியதாக சிறை வார்டனும் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இந்த புகாருக்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்த நிலையிலும், இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு நீதிமன்ற விசாரணைக்கு உத்தர விட்டனர்.
மேலும் 20 வயது இளம்பெண் ஒருவருக்கு காவல் நிலையத்திலேயே நேர்ந்து கொடுமையில் காரணமாக அம்மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.