சொந்த வீடு கட்டணுமா!! இந்த ரூல்ஸ் கட்டாயமா ஃபாலோ பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

சொந்த வீடு கட்டணுமா!! இந்த ரூல்ஸ் கட்டாயமா ஃபாலோ பண்ணுங்க!!

Gayathri

Is it possible to rent your own house!! Please follow these rules!!

சொந்தமாக வீடு கட்டுவது என்பது பலருக்கு இன்றைய காலகட்டத்தில் கனவாக இருக்கிறது. அதை மீறி சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டிய 13 விதிகள் குறித்த இங்கு காண்போம்.

சொந்த வீடு கட்ட நினைப்பவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகள் :-

✓ சொந்த வீடு கட்டக்கூடிய நிலத்தின் உறுதி தன்மையை கண்டறிய முதலில் மண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

✓ அரசினுடைய ஒப்புதலோடு வாழப்போகிற வீட்டின் வரைபடம் மிகவும் முக்கியமான ஒன்று.

✓ நம்முடைய வரைபடத்தில் உள்ள அறைகள் அனைத்தும் நிலத்தின் அளவீட்டிற்கு சரியாக உள்ளதா என்பதை கவனித்தல் மற்றும் இந்த ஒப்புதல் பிளானுக்கான அப்ரூவல் அரசால் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

✓ சில நேரங்களில் தனி கட்டணம் செலுத்தி தடையில்லா சான்றிதழ் பெறுதலும் முக்கியம்.

✓ வீட்டை கட்ட துவங்குவதற்கு முன்பு சிறந்த இன்ஜினியரை தேர்ந்தெடுப்பது மற்றும் அவருக்கான செலவுகளை முன்கூட்டியே பேசி முடிப்பது வீடு கட்டுவதில் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

✓ கட்டிடத்தை கட்ட துவங்குவதற்கு முன்பு இன்ஜினியர் மற்றும் கட்டிட தொழிலாளர்களுக்கான சம்பளத்தை பேசி முடிப்பது கட்டிடம் துவங்கிய பின்பு ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவும்.

✓ கட்டிடத்திற்கு பயன்படுத்தக் கூடிய மெட்டீரியல்கள் தரமுள்ளதா அவற்றிற்கான செலவு என்ன என்பதை முன்கூட்டியே கணக்கிட்டு வைத்தல் சிறந்தது.

✓ வீடு கட்டுவதற்கான பட்டியலில் இருந்து வீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் திறந்த வெளிக்கிணறு தோண்ட விரும்பினால் அதற்கான பணத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.

✓ கட்டிடத்தை பூர்த்தி செய்யக் கூடிய மின்சாரம் டைல்ஸ் கீழ்தரை மற்றும் மேல் மாடிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுக்கும் பணத்தை ஒதுக்கி வைத்தல் பணச்சிக்கல்லில் இருந்து முன்கூட்டியே பாதுகாக்க பயன்படும்.

✓ தண்ணீர் டேங்க், நிலத்தடி நீர் பைப்புகள், மெட்ரோ மற்றும் முனிசிபல் நீர், கழிவு நீர், திட கழிவு அகற்றல், மழை நீர் வடிகால் போன்றவற்றை உன் வீடு கட்டும் பொழுது சரியாக பார்த்து அமைத்து விடுவது மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. எனவே இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

✓ வீட்டின் வெளிப்புறத் தோற்றத்திற்கான காம்பவுண்ட், கலர் விளக்குகள் மற்றும் பெயிண்ட் போன்றவற்றிற்கான பட்ஜெட்டையும் வீடு கட்ட துவங்கும் முன்பே போட்டு வைத்தால் நல்லது.

✓ லிஃப்ட் ,ஜெனரேட்டர் மற்றும் சிசிடிவி கேமரா போன்ற செலவுகள் தேவை என்றால் மட்டுமே மேற்கொள்ளப்படுதல் அவசியம்.

✓ குறிப்பாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் வீடு கட்டப்படுதல் வரும் காலங்களில் எந்தவித பிரச்சனையும் நமக்கு ஏற்படாது.