இனி நாமும் கேமரா வாங்கலாமா? பாஜெட் இவ்வளவு தான்!

0
73

இனி நாமும் கேமரா வாங்கலாமா? பாஜெட் இவ்வளவு தான்!

இந்த டிஜிட்டல் உலகத்தில் புகைப்படங்களும் வீடியோக்களும் தான் அதிக இடத்தை பெற்றுள்ளது.அந்த வகையில் ஒரு

கேமரா வாங்கும் போது நம் பட்ஜெட்டிற்குள் சிறந்த மாடலை கண்டு பிடிப்பது மிகவும் சவாலான காரியம் எனலாம். சிறப்பான புகைப்படங்களை எடுப்பதற்கு தேவையான கேமரா ஒன்றும் அதிக விலை உயர்ந்தது இல்லை. ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருப்பவர்கள் அடுத்து எண்ட்ரி லெவல் கேமராவை தேர்வு செய்யும் பட்சத்தில் ஏராளமான DSLR மாடல்கள் உள்ளன.ஆனால், நம் தேவைக்கு ஏற்ற சிறந்த கேமராவை தேர்வுசெய்வது தான் முக்கியத் துவம் வாய்ந்தது. ரூ. 1 லட்சம் பட்ஜெட்டிலேயே கிடைக்கின்றன.

இது மட்டும் இன்றி ஏராளமான மிரர்லெஸ் கேமரா மாடல்களும் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்திய சந்தையில் கிடைக்கும் கேமரா மாடல்களில் அனைவரின் தேவைக்கு ஏற்றார் போல் ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும்.கேனான் EOS R10 இந்திய சந்தையில் ரூ. 1 லட்சம் விலையில் கிடைக்கும் சிறந்த மிரர்லெஸ் கேமரா மாடல் எனலாம். சுமார் 429 கிராம் எடை கொண்டு இருக்கும் கேனான் EOS R10 மாடலில் 24.2MP APS-C CMOS சென்சார் மற்றும் 1.6x க்ராப் ஃபேக்டர் உள்ளது. இந்த கேமரா நொடிக்கு 23 ஃபிரேம்களை படம் பிடிக்கும். இத்துடன் DIGIC X இமேஜ் பிராசஸர் உள்ளது. இந்திய சந்தையில் கேனான் EOS R10 மாடலின் விலை ரூ. 80 ஆயிரத்து 995 ஆகும்.

இந்த கேமரா மாடல் சற்றே பழையது தான் என்றாலும் 2022 ஆண்டில் சிறந்த மிரர்லெஸ் கேமராவாக சோனி A6400 இருக்கிறது. இதில் உள்ள தொடுதிரையை 180 டிகிரிக்களில் ப்ளிப் செய்யும் வசதி கொண்டு இருக்கிறது. இந்த சோனி கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் வசதி உள்ளது. இந்திய சந்தையில் சோனி A6400 மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

 

ஃபுஜிஃபில்ம் X-T30 இந்த கேமராவில் 1.62 மில்லியன் டாட் எல்.சி.டி. பேனல் மற்றும் X Trans CMOS 4 சென்சார், X பிராசஸர் உள்ளது. இந்த கேமரா கொண்டு தலைசிறந்த புகைப்படங்கள் மட்டும் இன்றி 4K வீடியோக்களை 30fps தரத்தில் படமாக்க முடியும். இந்திய சந்தையில் ஃபுஜிஃபில்ம் கேமரா மாடல் விலை ரூ. 88 ஆயிரத்து 999 ஆகும்.

 

மேலும் கேனான் நிறுவனத்தின் புதிய M சீரிஸ் கேமரா இது ஆகும். வைபை கனெக்டிவிட்டி கொண்டு இருக்கும் கேனான் EOS M50 Mark II கொண்டு புகைப்படங்களை கேமராவில் இருந்து ஸ்மார்ட்போனிற்கு பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இந்த கேமராவில் 24.1MP CMOS சென்சார் உள்ளது. இதை கொண்டு 4K வீடியோக்களை படமாக்க முடியும். இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 58 ஆயிரத்து 995 ஆகும். இந்த காலகட்டத்தில் அனைவரும் புகைப்படம் சேகரித்து வைப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் கேமராக்களின் விலை அதிகரித்து வருகிறது.என புகைப்பட பிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

author avatar
Parthipan K