காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்குமா ??

0
148

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் கிடைக்குமா ??

 

 

பூண்டு பற்களை பச்சையாக வெறும் ஒரு கிளாஸ் பச்ச தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அதன் நன்மைகளை முழுமையாக பெற முடியும். கீழே நெறைய இருக்கு வங்க படிக்கலாம்!பூண்டு சாப்பிடுவதால் உங்க ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. தினமும் காலையில் ஒரு கிளாஸ் தண்ணீருடன் பூண்டு பற்களை சாப்பிடுவது உங்க ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் வழி வகுக்கும்.சமையலைப் பொருத்தவரை பூண்டு மிக முக்கியமான பொருளாகும். பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்ற பண்புகள் காணப்படுகிறது. கொலஸ்ட்ராலை கரைப்பதில் பூண்டு மிகச் சிறந்த பங்காற்றுகிறது.

இந்த பூண்டு பற்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது நல்ல சீரண சக்தியை நீங்கள் பெற முடியும். டயாபெட்டீஸ் நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவுகிறது.காலையில் எழுந்ததும் பூண்டு சாப்பிடுவது நல்ல செரிமானத்திற்கு உதவும். பூண்டு உங்க செரிமான கோளாறுகளை தடுக்க உதவுகிறது. இது உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைத்து எடையை குறைக்க உதவுகிறது. எனவே எடை அதிகமாக இருக்கும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டு சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. நீரிழிவு நோய், மன அழுத்தம் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களை அகற்ற இது உதவுகிறது.காசநோய் போன்ற சுவாச பாதையில் ஏற்படும் சளித்தொல்லைக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். தினந்தோறும் பூண்டு சாப்பிடுவது காசநோய் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வராமல் தடுக்க பூண்டு உதவுகிறது. இதயக் குழாய்களில் கொழுபு்புகள் சேருவதைத் தடுக்கிறது. அதனால் மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.பூண்டு நம் உடலில் உள்ள சில முக்கியமான உடல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உங்க ஆயுளை நீட்டிக்க உதவுகிறது. எனவே பூண்டை உணவில் சேர்த்து வந்தால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும்.

 

 

author avatar
Parthipan K