முந்தைய காலத்தில் திருமணம் ஆன உடனேயே கருத்தரித்து குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். அதிலும் எண்ணிக்கை இல்லாமல் கூட பெற்றுக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் குழந்தை என்றாலே 1அல்லது 2 தான். இத்தகைய நிலைமைக்கு மாறிவிட்டது இன்றைய உலகம். அதிலும் சிலர் திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து பொறுமையாக குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என எண்ணி வாழ்பவர்களும் உள்ளனர்.
அவ்வாறு கருத்தரிப்பதை தள்ளிப் போடும் தம்பதியினர் தமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று எண்ணுகிற பொழுது அவர்களது வயது 30 ஐ தாண்டி இருக்கும். அவ்வாறு இருக்கும் பொழுது அந்த வயதில் நம்மால் ஆரோக்கியமான முறையில் குழந்தையை பெற்றெடுக்க முடியுமா என்று சந்தேகம் அவர்களுக்குள் எழுகிறது. ஏனென்றால் 35 வயதிற்கு மேல் குழந்தை பெறுவது என்பது முடியாத காரியம் அல்லது கஷ்டமான காரியம் என்ற கருத்து நிலவி வருகிறது. அதற்கு பயந்து சிலர் பல்வேறு சந்தேகங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். அதற்கான தீர்வை பற்றி தான் இங்கு காணப் போகிறோம்.
பொதுவாக பெண்களுக்கு வயதாகும் பொழுது கருமுட்டையின் இருப்பும் எண்ணிக்கையும் குறைந்து, அதன் தரம் மற்றும் அளவும் பாதியாக குறைந்து விடும். எனவே பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் பொழுதே கர்ப்பம் தரிப்பது நல்லது. ஏனெனில் 35 வயதுக்கு பின்பு குறைந்த எண்ணிக்கையிலான கருமுட்டைகளை மட்டுமே அவர்கள் கொண்டிருப்பர். இதனால் அவர்கள் கர்ப்பமாவது கடினமாகிவிடும். எனவே 35 வயதிற்கு பின்பு கருத்தரிக்க விரும்புபவர்கள் மருத்துவர்களிடம் கருமுட்டை இருப்பு குறித்து பரிசோதித்து அதன் பிறகு குழந்தையை பெற்றுக் கொள்ளலாம்.
ரத்த பரிசோதனையின் மூலமே மருத்துவர்கள் கருமுட்டைகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு கூறுவார்கள். இந்த பரிசோதனையின் மூலம் உங்கள் கருமுட்டைகளின் எண்ணிக்கை மற்றும் குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
பெண்கள் வயதிற்கு வந்த 10 முதல் 15 வருடத்திற்குள் கர்ப்பம் தரிப்பது நல்லது என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் ஆரோக்கியமான பெண்களாக இருந்தால் 30 வயது வரையிலும் கர்ப்பம் தரிக்கலாம் எந்த சிரமமும் இருக்காது என்றும் கூறுகின்றனர். ஆனால் 30 வயதை கடந்த உடன் கருப்பையில் உள்ள கருமுட்டைகளின் எண்ணிக்கை காணப்போக்கில் குறைந்து கொண்டே வரும்.
இதனால் கருத்தரிப்பது மிகவும் கடினம். பெண்ணின் வயது முதுமையடையும் பொழுது கருமுட்டைகளுக்கும் முதுமை அடைய தொடங்கும். எனவே முடிந்த அளவிற்கு பெண்கள் தங்களது 35 வயதிற்குள் கருத்தரிக்க முயற்சி செய்வது சிறந்தது.ஆனால் ஒரு பெண்ணின் அதிகபட்ச கருவுறுதல் திறன் இந்த வயது வரையில்தான் என்று யாராலும் சொல்ல முடியாது.