பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு பிரச்சனையா? இதை தடவினால் இனி சொரிய வேண்டிய நிலை ஏற்படாது!!

Photo of author

By Rupa

பெரும்பாலான பெண்களுக்கு அந்தரங்க பகுதியில் தொற்றுக்கள் ஏற்பட்டு அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இந்த பாதிப்பு இயல்பான ஒன்று தான் என்றாலும் அதை இயற்கையான முறையில் சரி செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)தேங்காய்
2)கஸ்தூரி மஞ்சள் தூள்
3)குழம்பு மஞ்சள் தூள்
4)கருஞ்சீரகம்

செய்முறை:

*முதலில் ஒரு மூடி தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும்.தேங்காய் மைய்ய அரைந்ததும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் எடுக்கவும்.

*பிறகு இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி 1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி குழம்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்தவிடவும்.

*பிறகு ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை அதில் போட்டு கலக்கி 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.

*பிறகு கிண்ணத்தில் உள்ள தேங்காய் பால் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

*தேங்காய் பால் நன்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.பிறகு இதை ஆறவிட்டு பாட்டிலில் ஊற்றி சேமிக்கவும்.இந்த க்ரீமை அந்தரங்க பகுதியில் அரிப்பு உண்டாகும் இடத்தில் அப்ளை செய்து வந்தால் உரிய பலன் கிடைக்கும்.

மற்றொரு தீர்வு:

தேவைப்படும் பொருட்கள்:

1)தயிர்
2)தேன்
3)மஞ்சள் தூள்

செய்முறை:

*ஒரு கிண்ணத்தில் பிரஸ் கெட்டி தயிர் ஒரு ஸ்பூன் சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.இதை அந்தரங்க பகுதியில் அப்ளை செய்து சிறிது நேரம் உலரவிடவும்.

*பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி அந்தரங்க பகுதியை சுத்தம் செய்தால் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)வேப்பிலை
2)தயிர்

செய்முறை:

*முதலில் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

*பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.

*அரைத்த விழுதில் தயிர் கலந்து அந்தரங்க பகுதியில் அப்ளை செய்தால் அரிப்பு பிரச்சனை சரியாகும்.