குலாம் நபி ஆசாதை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி உத்திரப்பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
காங்கிரசின் காரியக் கமிட்டி கூட்டத்திற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி மாற்றம் குறித்து கடிதம் எழுதிய 24 பேர்களில் குலாம் நபி ஆசாத்தும் அடங்குவார்.
இவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் நசீப் பதான் வலியுறுத்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய அவர், “காங்கிரஸ் கட்சியில் தலைமை மாற்றம் தேவை என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான 24 பேர் கடிதம் ஒன்றினை தலைமைக்கு எழுதியிருந்தனர்.
அதன் பிறகு நடந்த காரியக் கமிட்டி கூட்டத்தின் முடிவில் காங்கிரஸில் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை சோனியா காந்தியே மீண்டும் தலைவராக தொடர்வார் முடிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு, சமீபத்தில் கடிதம் எழுதிய 24 பேரில், குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் தலைமை விரைவாக தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் காங்கிரஸ் இனிய 50 ஆண்டுகளுக்கும் எதிர்க்கட்சியாக தான் இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதனால் இவர் கட்சி தலைமை முடிவிற்கு கட்டுப்படாமல், கட்சியின் ஒழுக்கத்தை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்” என நசீப் பதான் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குள் உள்கட்சி பூசல் மற்றும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
குலாம் நபி ஆசாத்திற்க்கு எதிராக நசீப் பதான் ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததற்காக முழு பொறுப்பேற்று, மாநில பொறுப்பாளராக இருந்த குலாம்நபி ஆசாத் பதவி விலக வேண்டும் என நசீப் பதான் குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.