டியூஷன் வந்த மாணவிக்கு செக்ஸ் பாடமா? கைவரிசையை காட்டிய ஆசிரியர்!

Photo of author

By Rupa

டியூஷன் வந்த மாணவிக்கு செக்ஸ் பாடமா? கைவரிசையை காட்டிய ஆசிரியர்!

சமீபத்திய காலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்த வண்ணமாகவே உள்ளது. பெண்கள் படிக்கும் பள்ளிகள் கல்லூரிகள் வரை அவர்களுக்கு பாலியல் தொல்லை என பல புகார்கள் அடுத்தடுத்தாக பதிவு செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. நேற்று பட்டப்பகலில் கோவை மாவட்டத்தில் மக்கள் நடமாடும் இடத்தில் மர்மநபர்கள் பெண்ணின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல ஒரு மாதத்திற்கு முன் அதே கோவையில் வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு அப்பள்ளி ஆசிரியர் சக்கரவர்த்தி என்பவர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை மறக்க முடியாமல் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை கோரி கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் யாரையும் சும்மா விட்டுவிடாதீர்கள் என்று கூறியது அனைவர் மனதையும் உருக்கியது. அதனைத் தொடர்ந்து இன்று ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பர்கூர் சாலை அருகே வனத்துறை அலுவலகம் உள்ளது. இந்த வனத்துறை அலுவலகத்தின் முன்பு ஒரு டியூஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த டுயூஷன் சென்டர் ஆசிரியர் தான் லோகநாதன். இவரது டியூஷன் சென்டருக்கு 10 மற்றும் 11 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வருகை புரிவர். அவ்வாறு வரும் மாணவர்களிடம் ஆபாசமாக பேசுவதும், அத்துமீறி நடந்து கொள்வதும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த டியூஷன் சென்டரில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் தகாத முறையில் டியூஷன் ஆசிரியர் லோகநாதன் நடந்துள்ளார்.

வீட்டில் நடந்ததை கூறினாள் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் இன்று அந்த மாணவி நினைத்துக்கொண்டு தனக்கு நேர்ந்த அவலத்தை யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். டியூஷன் ஆசிரியரின் அத்துமீறலால் அந்த 16 வயது மாணவி தற்பொழுது கர்ப்பமாகியுள்ளார். இதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். டியூஷன் படிக்க சென்ற தனது பெண்ணை அத்துமீறலில் ஈடுபட்டு கர்ப்பம் ஆகியுள்ளார் என மாணவியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

பெற்றோரின் புகாரை அடுத்து போலீசார் டியூஷன் ஆசிரியர் லோகநாதன் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட லோகநாதன் கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ளார். பின்பு டியூசன் ஆசிரியர் லோகநாதன் மீது ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் கிருஷ்னுண்ணி, ஆசிரியர் நாதனின் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். தற்போது மத்திய சிறையில் உள்ள லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.