சிம்புவிற்கு திருமணமா? டி ராஜேந்திரன் பேட்டி ரசிகர்கள் ஆர்வம்!
திரைவுலகில் டி.ராஜேந்திரன் நடிப்பிலும் தனது இயக்கத்திலும் பெரும் புகழை அடைந்துள்ளார் அந்த வகையில் அவரது மகன் நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு ஹீரோ. இவர் சந்தித்த பிரச்சனை போல் மற்ற நடிகர் எதிர்க்கொண்டால் இவ்வளவு ஆதரவை ரசிகர்களால் பெறுவார்களா என்றால் சந்தேகம் திரை உலகில் இருக்கிறது.மேலும்
சிம்புவின் தோல்வி நேரத்தில் அவரது ஆதரவாக ரசிகர்கள் இருந்துள்ளார்கள். மேலும் இந்நிலையில் தற்போது சிம்பு உடல் எடையை குறைத்து சுறுசுறுப்பாக படங்கள் நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் சமீபத்தில் சிம்புவின் அப்பாவும், இயக்குனர் நடிகருமான டி.ராஜேந்தர் அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது அதனால் அவர் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார். அங்கு சிகிச்சை முழுமையாக முடிந்த பின் மீண்டும் வீடு திரும்பினார் டி ராஜேந்திரன்.
பிறகு ராஜேந்தர் கொடுத்த இல் பேட்டியில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவந்த ராஜேந்தர் அவர்கள் சென்னை வந்துள்ளார். அப்பொழுது அவர் விமான நிலையத்தில் பேட்டி கொடுத்துள்ளார், அப்போது சிம்பு திருமணம் குறித்தும் பேசியுள்ளார்.
மேலும் சிம்புவின் நல்ல மனதிற்கு நல்ல பெண் கிடைப்பார் என கூறினார். மேலும் திருமணம் என்பதை கடவுள் நினைக்க வேண்டும் அப்போதுதான் அந்த திருமணம் முழுமை அடையும் எனவும் அவரது ஸ்டைலில் கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள் விரைவில் சிம்புவிற்கு திருமணம் நடைபெறுமா என்று எண்ணி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.