நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா மாநில பாஜக தலைவர் அண்ணாமலை?

Photo of author

By Savitha

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறாரா மாநில பாஜக தலைவர் அண்ணாமலை?
டெல்லியில் நேற்று பாஜக தேசிய தலைவர் ஜொ.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்ட மையகுழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாநில வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சி சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சிதாராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போட்டியிடவுள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது, தமிழகத்தில் அதிக ஓட்டுகளை பெறக்கூடிய செல்வாக்கு நிறைந்த ஜந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒரு தொகுதியில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது எனவே மாநில வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.