பொன்னியின் செல்வன் இமாலய வெற்றி… தூசு தட்டப்படுகிறதா சுந்தர் சி யின் சங்கமித்ரா?

0
168

பொன்னியின் செல்வன் இமாலய வெற்றி… தூசு தட்டப்படுகிறதா சுந்தர் சி யின் சங்கமித்ரா?

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது.

சுந்தர் சி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்யா, ஜெயம் ரவி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் சங்கமித்ரா என்ற படத்தைத் தொடங்கினார். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படத்துக்காக பாடல்கள் கூட உருவாக்கப்பட்டன. படத்தின் முதல் லுக் போஸ்டர் திரைப்பட விழா ஒன்றில் வெளியிடப்பட்டது.

மிகப்பிரம்மாண்டமாக உருவாக இருந்த இந்த படத்தை பொருளாதார பிரச்சனைகள் உள்ளிட்ட சில காரணங்களால் தொடங்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளாகியும் அந்த படத்தைத் தொடங்க முடியவில்லை. இதனால் படத்தில் ஒப்பந்தம் ஆன நடிகர் நடிகைகள் படத்தில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தை மீண்டும் தயாரிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம் சமீபத்தில் வெளியாகி இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு வெற்றியை ஈட்டியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் என்று சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலும், தமிழ்நாட்டில் 225 கோடி ரூபாய்க்கு மேல் வசூலும் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் தந்திருக்கும் நம்பிக்கையால் இதே போன்ற வரலாற்றுக் கதைக்களமான சங்கமித்ராவை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleவாரிசு படத்தின் ஷூட்டிங் இன்னும் இத்தனை நாள் இருக்கா?… பீதியைக் கிளப்பும் படக்குழு!
Next articleஒரு பிரியாணி இலைகளை இப்படி எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?